திருநெல்வேலியில் கழிவுகள் கொட்டியவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை என்ன? - பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: ​திருநெல்​வேலி​யில் மருத்​துவக் கழிவுகளை கொட்​டிய​வர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்​பாயம் உத்தர​விட்​டுள்​ளது.

கேரள மாநிலத்​தில் சேகர​மாகும் மருத்​துவக் கழிவு​கள், அம்மாநில எல்லையை ஒட்டிய திருநெல்​வேலி மாவட்​டத்​தின் வனப் பகுதியான கோடகநல்​லூர், பழவூர், சிவனார்​குளம், கொண்​டாநகரம் ஆகிய இடங்​களில் கடந்த டிச.16, 17, 18-ம் தேதி​களில் கொட்​டப்​பட்டன. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென்​மண்டல அமர்வு தாமாக முன்​வந்து வழக்​காகப்பதிவு செய்து விசா​ரித்து வருகிறது. மேலும், அந்த கழிவுகளை 3 நாட்​களில் அகற்ற வேண்​டும் என்று டிச.19-ம் தேதி கேரள அரசுக்கு உத்தர​விட்​டிருந்​தது.

இந்நிலை​யில் இந்த வழக்கு அமர்​வின் நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் கே.சத்​யகோபால் ஆகியோர் முன்னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்தது. அப்போது, "கழி​வு​களை கொட்டிய ஒரு புற்று​நோய் மருத்​துவ​மனை, இரு ஓட்டல்கள் ஆகியவை மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்கை என்ன?" என அமர்​வின் உறுப்​பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, கேரள அரசுத் தரப்பு வழக்​கறிஞர், "அமர்​வின் உத்தரவுப்​படி, திருநெல்​வேலி​யில் கொட்​டப்​பட்ட அனைத்​துக் கழிவு​களும் அகற்​றப்​பட்டன. விதி​மீறல் நிறு​வனங்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்" என தெரி​வித்​தார்.

அப்போது குறுக்​கிட்ட தமிழ்​நாடு மாசு​கட்டுப்​பாடு வாரிய வழக்​கறிஞர் சாய்​சத்​யஜித், ‘‘இவ்​வாரியம் அனுப்பிய கடிதத்​தின் அடிப்​படை​யில், விளக்கம் கேட்டு தொடர்​புடைய நிறு​வனங்​களுக்கு கேரள மாசு ​கட்டுப்​பாடு வாரியம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. கேரள அரசு அதிகாரிகளே நேரில் பார்​வை​யிட்ட நிலை​யில், அதன் அடிப்​படை​யில்​தான் விளக்கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி இருக்க வேண்​டும்" என்று வாதிட்​டார்.

தொடர்ந்து, தமிழக அரசு்​தரப்பு வழக்​கறிஞர் ஆஜராகி, ‘‘திருநெல்​வேலி பகுதி​யில் இருந்து 390 டன் மருத்​துவக் கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் 30 லாரி நடைகளில் அகற்​றப்​பட்​டுள்ளன. இதற்​கிடையே, களியக்​கா​விளை பகுதி​யில் வீடு​களில் உருவாகும் திடக்​கழி​வுகளை ஏற்றிவந்த லாரி கடந்த டிச.23-ம் தேதி பொது​மக்​களால் சிறைபிடிக்​கப்​பட்​டது. விதி​மீறல் நிறு​வனங்​களுக்கு நோட்​டீஸ் வழங்கி, 7 நாள் அவகாசம் முடிந்த நிலை​யில், எந்த நடவடிக்கை​யும் எடுக்க​வில்லை. நோட்​டீஸ் வழங்கி இருப்பது வெறும் கண்துடைப்பு​தான். எனவே விதிகளை மீறும் கேரள அரசுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்க வேண்​டும்" என்றார்.

பின்னர் அமர்​வின் உறுப்​பினர்கள் பிறப்​பித்த உத்தர​வில், ‘‘வி​தி​மீறலில் ஈடுபட்ட நிறு​வனங்கள் மீது நடவடிக்கை எடுக்​காதது ஏன்? என்பது குறித்து கேரள அளவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்​டும். கேரள அரசின் நடவடிக்கை திருப்​தி​யளிக்​கா​விட்​டால், தீர்ப்​பாயமே சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்​தில் கொட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்​டும். எல்லையோர மாவட்​டங்​களில் சிறப்பு அதிரடிப்​படையை அமைத்து கழி​வு​கள் ​கொண்டு​வரப்​படுவதை தடுக்க தமிழக அரசு நட​வடிக்கை எடுக்க வேண்​டும்" என கூறப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு மீதான அடுத்த ​விசாரணை ஜன.20-ம் தே​திக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்