கல்வி வளாகங்​களில் வெளிநபர் நுழைய கட்டுப்​பாடு: தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கல்வி வளாகங்​களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்​பாடுகள் விதிக்க வேண்​டும் என்று தேசிய மகளிர் ஆணையத்​தின் உறுப்​பினர் அறிவுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்​கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையத்​தின் உறுப்​பினர் பிரவீன் தீட்​சித் சென்னை விமான நிலையத்தில் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்ள நபரின் கடந்​த கால செயல்​பாடுகள் என்னென்ன, அவருடன் தொடர்பில் இருந்​தவர்கள் யார் என்பது குறித்து முழு​மையாக விசா​ரிக்க வேண்​டும்.

அப்போது​தான் இந்த சம்பவத்​தில் வேறு யாருக்கு தொடர்பு இருக்​கும் என்பது தெரிய வரும். அந்த நபர் பயன்​படுத்திய செல்​போன், லேப்​டாப் உள்ளிட்ட மின்​சாதனங்கள் அனைத்​தை​யும் பரிசோதனை செய்ய வேண்​டும்.

பல்கலைக்​கழகங்கள் மற்றும் கல்லூரி​களில் அனும​தி​யின்றி வெளி​யாட்கள் நுழைவதைத் தடுக்க கட்டுப்​பாடுகள் விதிக்க வேண்​டும். கண்காணிப்பு கேமராக்களை பாது​காப்பு ஊழியர்கள் அவ்வப்​போது ஆய்வு செய்ய வேண்​டும்.

பாலியல் கொடுமை தொடர்பான வழக்​குகளை துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள காவல்​துறை அதிகாரிகள் விசா​ரிக்க வேண்​டும். பெண்களிடையே ‘112 இந்தியா’ என்ற அவசரகால உதவி செயலி குறித்து விழிப்பு​ணர்வு ஏற்படுத்த வேண்​டும். பாலியல் புகாரை உறுதிப்படுத்த பெண் மருத்​துவர்கள் அடங்கிய குழு​வினர் பாதிக்​கப்​பட்ட நபரை பரிசோதனை செய்ய வேண்​டியது அவசி​யம். வழக்கு விசா​ரணை​யின்​போது அனுபவம் வாய்ந்த வழக்​கறிஞர்களை நியமிக்க வேண்​டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்