சென்னை: ‘காவி’ திருவள்ளுவருக்கு ‘காவி’ சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: டிசம்பர் 31-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திருவள்ளுவர் வெறும் சிலையல்ல. திருக்குறள் வெறும் நூல் அல்ல. நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும்.
அதுநம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும்” என பேசியுள்ளார். திருக்குறள் முழுவதும் அறம், பொருள், இன்பம் என இந்துத்துவ கருத்துகளைத்தான் திருவள்ளுவர் பேசியுள்ளார்.
திருக்குறளின் ஆன்மாவே ஆன்மிகம்தான். திருக்குறளின் ஆன்மாவான ஆன்மிகத்தை நீக்கி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். திருவள்ளுவருக்கு யாரும் காவி சாயம் பூச வேண்டியது இல்லை. திருக்குறளும், திருவள்ளுவரும் என்றும் காவிதான். இந்த மண்ணின் கலாச்சாரத்தை பின்பற்றும் இந்துக்களிடம் இருந்து திருக்குறளையும், திருவள்ளுவரையும் அந்நியப்படுத்த முயற்சிக்கும் முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago