தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

தமிழகத்​தில் வடகிழக்​குப் பருவமழை இறுதிக்​கட்​டத்தை நெருங்கி வருகிறது. பொங்​கலுக்​குள் மழை விலகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், தமிழகத்​தில் கடந்த சில தினங்​களாக பனிப்​பொழிவு அதிகரித்​துள்ளது. நேற்று அதி காலை சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்​டங்​களில் மிதமான பனிமூட்டம் நிலவியது. காலை 6 மணிக்கு சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய​விட்​டபடி சென்றன.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பூமத்திய ரேகை​யையொட்டிய இந்தியப் பெருங்​கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். ஓரிரு இடங்​களில் லேசான பனிமூட்டம் காணப்​படும்.

வரும் 3 முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 7-ம் தேதி கடலோர மாவட்​டங்​களி​லும் சில இடங்​களில் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதிகாலை நேரத்​தில் லேசான பனிமூட்டம் நிலவும்.

ஜன. 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்படி அதிகபட்​சமாக திருநெல்​வேலி மாவட்டம் ஊத்து பகுதி​யில் 18 செ.மீ., நாலு​முக்கு பகுதி​யில் 16 செ.மீ., காக்​காச்​சி​யில் 15 செ.மீ. மாஞ்​சோலை​யில் 13 செ.மீ., கன்னி​யாகுமரி மாவட்டம் சுருளக்​கோடு, தூத்​துக்​குடி மாவட்டம் மணியாச்சி, திருநெல்​வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்​களில் 3 செ.மீ., ராமநாத​புரம் மாவட்டம் தங்கச்​சிமடம், திருநெல்​வேலி மாவட்டம் சேர்​வலாறு அணை ஆகிய இடங்​களில் 2 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது.

தென்​தமிழக கடலோரப் பகுதி​கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்​கடல் பகுதி​களில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.

இவ்​வாறு செய்திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்