புதுச்சேரி: புத்தாண்டு கொண்ட்டாட்ட விபத்துகளில் 2 இளைஞர்கள் உயிரிப்பு, 57 பேர் காயம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு, புதுச்சேரி கடற்கரை சாலை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்று கூடி, கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் புத்தாண்டை வரவேற்றனர். மேலும் நகரம் மற்றும் கிராமங்களில் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் உற்சாகமாக வலம் வந்தனர். சிலர் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி முத்திரையர்பாளையம் நெல்லுமண்டி வீதியைச் சேர்ந்த அருள்பாண்டியன் (33) என்பவர் புத்தாண்டு முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கோரிமேடு விநாயகர் கோயில் தெரு வழியாக அருள்பாண்டியன் சென்றபோது, நிலைதடுமாறி வாகனத்தில் இருந்த கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அவ்வழியாக வந்த சிலர் அருள்பாண்டியனை, மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்பாண்டியன் உயிரிழந்தார். இதேபோல் அரியூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (21) என்பவர் நண்பர் பாலாஜியுடன் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தனர். இதில் தேவராஜ் உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கள் குறித்து புதுச்சேரி கிழக்கு பகுதி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி புதுச்சேரி முழுவதும் பலரும் விபத்தில் சிக்கினர். குறிப்பாக 57 பேர் விபத்தில் சிக்கி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பெற்றனர். இது குறித்து கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பிரிவு போக்குவரத்து காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்