ஏராளமான அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் இயங்கி வரும் டிபிஐ வளாகத்தில் பொதுக் கழிப்பறை வசதி இல்லாதது, அங்கு வரும் பொதுமக்களுக்கு பெரும் சங்கடமாக இருந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் அமைந்துள்ளது டிபிஐ வளாகம். தற்போது அதன் பெயர் பேராசிரியர் அன்பழகன் வளாகம் என மாற்றப்பட்டுள்ளது. இங்கு அரசுத்துறைகளின் தலைமை அலுவலகங்கள் பல இயங்கி வருகின்றன.
பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகம், அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம், பள்ளிசாரா கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு பாடநூல் மற்றம் கல்வியியல் பணிகள் கழகம், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் என பள்ளிக் கல்வித்துறை தொடர்பான அனைத்து தலைமை அலுவலகங்களும் இந்த வளாகத்தில்தான் உள்ளன.
மேலும், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), சிபிஐ தென்மண்டல அலுவலகம், மத்திய வெளியுறவு அமைச்சக கிளைச் செயலகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன. இந்த அரசு அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பல்வேறு பணிகளுக்காக தினமும் இந்த வளாகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வேலைநாட்களில் தினமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டிபிஐ வளாகத்தில் பொது கழிப்பறை வசதி இல்லாதது பெருங்குறையாக இருந்து வருகிறது.
» துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசும் ஆளுநரும் மோதல் போக்கை கைவிட வேண்டும் - பாலகுருசாமி
» உத்தரப் பிரதேசம் | குடும்பத் தகராறு காரணமாக தாய், 4 சகோதரிகளை கொலை செய்த இளைஞர் கைது
அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் ஈவிகே சம்பத் மாளிகை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம், எஸ்எஸ்இ கட்டிடம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கட்டிடம் உள்ளிட்டவற்றில் அந்தந்த அரசு அலுவலகங்களுக்கென தனியாக கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால், டிபிஐ வளாகத்துக்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பொதுக்கழிப்பறை வசதி இல்லை. ஒருசில அரசு அலுவலகங்களில் உள்ள தனி கழிப்பறைகளை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த முடிகிறது.
ஒருசில அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகளை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. பணிநிமித்தமாக வெளியூர்களில் இருந்து வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காலையில் வந்தால் வேலையை முடித்துவிட்டு புறப்பட அரைநாள் ஆகிவிடுகிறது. எனவே, பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து டிபிஐ வளாகத்துக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, “இங்கு பொது கழிப்பறை வசதி இல்லாதது மிகவும் சிரமமாக இருக்கிறது. தினமும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்துசெல்லக்கூடிய ஒரு வளாகத்தில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படாதது ஆச்சரியமாக உள்ளது. ஆண்கள் ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் சிறுநீர் கழித்து எப்படியோ சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால், பெண்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபம். டிபிஐ வளாகத்தில் காலியான இடங்கள் நிறைய உள்ளன.
எனவே, பொது கழிப்பறை கட்டுவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு டிபிஐ வளாகத்தில் பொதுக் கழிப்பறை வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு பணிக்காக தேவைப்பட்டால் குறைந்த கட்டணம் கூட வசூலித்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago