பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையில் வெடித்த மோதல் உடனடியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி என அன்புமணி முடிவெடுத்ததிலிருந்தே இருவருக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தேர்தல் அரசியலுக்கு வந்தது முதலே சட்டமன்றத்திலும், மக்களவையிலும் பாமக-வுக்கான பிரதிநிதித்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார் ராமதாஸ். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை மாற்றுவதாக வரும் விமர்சனங்களை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் கட்சியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதிலேயே குறியாக இருந்தார் ராமதாஸ்.
ஆனால், அன்புமணியின் விருப்பத்தில் 2014-ல் பாஜக-வுடன் கூட்டணி வைத்தது பாமக. அப்போது தருமபுரியில் அன்புமணி மட்டும் வென்றார். 2016-ல் தனித்துக் களம் கண்டு படுதோல்வியை சந்தித்தது பாமக. கட்சி தொடங்கியது முதல் சட்டமன்றத்தில் பாமக-வின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது 2016-ல் மட்டும்தான்.
இதனால், ‘பழைய கசப்புகளை’ எல்லாம் மறந்துவிட்டு 2019-ல் அதிமுக கூட்டணியை புதுப்பித்தார் ராமதாஸ். அதற்கு அரைமன
தோடு சம்மதித்தார் அன்புமணி. அந்தத் தேர்தலில் தோல்வியை தழுவினாலும் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது. 2021 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து 5 தொகுதிகளில் வென்றது பாமக.
இந்தச் சூழலில் 2024-ல் பாஜக உறவை முறித்தது அதிமுக. அப்போது அதிமுக-வுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார் ராமதாஸ். இதற்கான பேச்சுவார்த்தைகளும் சி.வி.சண்முகம் மூலம் நடந்தது. தொகுதிகள் விஷயத்தில் முதலில் முரண்டுபிடித்த அதிமுக, பின்னர் பாமக கேட்கும் தொகுதிகளையும் கொடுக்க முன்வந்தது. ராஜ்யசபா சீட்டுக்கும் ஒத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது. அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகிவிட்டதாக செய்திகள் கூட வந்தது.
அப்போதுதான், டெல்லி ‘டீலை’ தொடர்ந்து திடீரென பாஜக-வுடன் கூட்டணி என அறிவித்தார் அன்புமணி. இது அப்போதே ராமதாஸ் மனதுக்கு ஒப்பவில்லை. இருந்தாலும், பாஜக கூட்டணி வெல்லும், மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் அன்புமணி சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது.
ஆனாலும், அந்த தேர்தலில் பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட சௌமியா அன்புமணியை தவிர பாமக வேட்பாளர்கள் யாராலும் இரண்டாம் இடம்கூட பிடிக்க முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நான்காம் இடத்துக்குப் போனது பாமக. இந்த முடிவுகள் ராமதாஸை அதிர்ச்சியில் உறையவைத்தது.
அதிமுக பக்கம் போயிருந்தால் தருமபுரி உட்பட சில தொகுதிகளில் வென்றிருக்கலாம். ராஜ்யசபா சீட்டையும் பெற்றிருக்கலாம் என்பது ராமதாஸின் ஆதங்கம். அப்படி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபமே இப்போது வெடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தொடர் தோல்விகளால் தொண்டர்கள் துவண்டுபோயுள்ளனர். இதே நிலை நீடிப்பது கட்சிக்கு நல்லதல்ல.
எனவே 2026 தேர்தலை கவனமாக அணுகவேண்டும். வெற்றிபெறும் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார் ராமதாஸ், அதற்கு அச்சாரமே இந்த மோதல். டெல்லி கனவில் தமிழகத்தில் கோட்டை விட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையில்தான் அன்புமணிக்கே சவால் விட்டிருக்கிறார் அவர்.
தலைவர் என்ற முறையில் கட்சி இப்போது அன்புமணியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனாலும், பாமக-வின் ஐகான் ‘அய்யா ராமதாஸ்’ தான். அதுபோக, அய்யா வழியோ, சின்னய்யா வழியோ நமக்கு தேவை வெற்றி என்பதே பாட்டாளிகளின் எண்ணம். என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago