“நாட்டில் சமூக நல்லிணக்கம் செழித்தோங்கட்டும்” - தமிழக முதல்வர், அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: உலகம் முழு​வதும் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்​தாண்டு கோலாகலமாக கொண்​டாடப்​படு​கிறது. புத்​தாண்​டையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களுக்கு புத்​தாண்டு வாழ்த்து தெரி​வித்​துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அவர்கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின்: விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாது​காத்து நாட்​டின் பெரு​மையை நிலைநாட்ட, தமிழக மக்கள் அளித்த வெற்றிக்​குரிய 2024-ம் ஆண்டு, மறக்க முடியாத ஆண்டாக அமைந்​து​விட்​டது. சோதனைகள் மற்றும் தடங்​கல்களை கடந்து சாதனைகள் படைக்​க​வும், வெற்றி​பெறவுமான நம்பிக்கை​யை​யும் உத்வேகத்​தை​யும் அளித்தது 2024-ம் ஆண்டு. புத்​தாண்​டாகிய 2025-ல் உலகெங்​கும் அமைதி திரும்​பட்டும். நம் நாட்​டில் சமூக நல்லிணக்கம் தழைத்​துச் செழித்​தோங்​கட்டும். இல்லந்​தோறும் அன்பும் மகிழ்ச்​சி​யும் நிறைந்​திருக்​கட்டும். தமிழகம் அதற்கு வழிகாட்டும். அனைவருக்​கும் எனது உளம் நிறைந்த ஆங்கில புத்​தாண்டு நல்வாழ்த்து​கள்.

அதிமுக பொதுச்​செய​லாளர் கே.பழனிசாமி: தமிழ்​நாட்​டில் அனைத்து நிலைகளி​லும் வாழும் மக்கள் நிம்​ம​தியான வாழ்க்கையை வாழ்​வதற்கான சூழலை ஏற்படுத்து​வதற்கு, நாம் அனைவரும் ஒன்று​பட்டு நிற்​போம். மக்கள் அனைவருக்​கும் இந்த புத்​தாண்டு, புதிய நம்பிக்கை​யையும், எழுச்​சி​யை​யும், மலர்ச்​சி​யை​யும், வளர்ச்​சி​யை​யும் வழங்​கும் ஆண்டாக மலரட்டும்.

முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்​வம்: புத்​தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்​கும் ஆண்டாக, துன்​பங்கள் கரைந்து இன்பங்கள் நிறை​யும் ஆண்டாக மாற்​றத்தை உருவாக்​கும் ஆண்டாக மலரட்டும்.

தமிழ்​நாடு காங்​கிரஸ் தலைவர் செல்​வபெருந்​தகை: 2025 ஆங்கில புத்​தாண்​டில் இந்தியா​வில் ஜனநாயகம் தழைக்​க​வும், மக்களின் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்​காலம் அமைய அனைவருக்​கும் புத்​தாண்டு நல்வாழ்த்து​கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை: நம் தமிழக மக்கள், திமுக ஆட்சி அவலத்​தின் இருட்​டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவு​களோடும், எதிர்​பார்ப்பு​களோடும், புத்​தாண்டை எதிர்​கொள்​கிறோம். நம்முடைய தேர்வு, நமக்​கானது மட்டுமின்றி, நம் அடுத்​தடுத்த தலைமுறை​களுக்​கு​மானது என்பதை நினை​வில் கொண்டு, நல்ல​வற்​றையே தேர்ந்​தெடுப்​போம்.

பாமக நிறு​வனர் ராமதாஸ்: 2025-ம் ஆண்டு நாம் எதிர்​பார்த்​ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்​கும் அனைத்து நலன்​களும் கிடைக்​கும். பொருளா​தாரம் வளரும், மகிழ்ச்சி பெரு​கும். அமைதி​யும், நிம்​ம​தி​யும் கிடைக்​கும். அவற்றை சாதிக்க கடுமையாக உழைப்​போம்.

மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பால​கிருஷ்ணன்: சமத்துவ சமூகம் மலர்​வதற்கான ஒரு புதிய பாதையை அமைக்​க​வும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்​க​வும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த புத்​தாண்​டில் சபதம் ஏற்போம்.

மதிமுக பொதுச்​செய​லாளர் வைகோ: தமிழ்​நாட்​டில் திமுக தலைமையிலான கூட்​ட​ணி​யில் உறுதியாக நின்று தமிழகத்​தைப் பாது​காக்க சூளுரைப்​போம். தமிழக மக்களுக்கு, உலகு​வாழ் தமிழர்​களுக்கு ஆங்கிலப் புத்​தாண்டு நல்வாழ்த்து​கள்.

விசிக தலைவர் திரு​மாவளவன்: ஜனநாயகம் தழைத்​தோங்​கும் ஒரு புதிய ஆண்டாக மலரட்டும். சாதி, மத அடிப்​படையிலான வெறுப்பு அரசியலே இல்​லாது ஒழியட்​டும்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன்: வகுப்பு வாத சக்திகளை அரசியல் அதிகாரத்​தில் இருந்து வெளி​யேற்ற வேண்​டும் என்ப​தில் 2025ம் ஆண்டிலும் முனைப்புடன் செயல்பட உறுதி ஏற்போம்.

தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா விஜய​காந்த்: உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், ஆகிய மூன்​றும் தமிழக மக்கள் அனைவருக்​கும் உறுதியாக கிடைக்க வேண்​டும். 2025-ம் ஆண்டு அனைவருக்​கும் இன்பம் பொங்​கும் ஆண்டாக அமைய வேண்​டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புத்​தாண்​டில் அனைவரும் நலமுடன், வளமுடன், மகிழ்ச்​சி​யுடன் வாழ இறைவனும், இயற்​கை​யும் துணை நிற்க வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லாளர் டிடிவி தினகரன்: உதயமாகும் புத்​தாண்டு நிறைவான வளத்​தை​யும், குறையாத மகிழ்ச்​சி​யை​யும் ஏற்படுத்​தும் ஆண்டாக மட்டுமின்றி மனிதநேய​மும், மதநல்​லிணக்​க​மும் தழைத்​தோங்​கும் ஆண்டாக​வும் அமையட்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: இந்த புத்​தாண்டு அறிவை​யும், ஆற்றலை​யும் மேம்​படுத்​தட்டும். புத்​தாண்​டில் நமது கனவுகள் நனவாகட்டும்.

திரா​விடர் கழகத் தலைவர் கி.வீரமணி: பிறக்​கும் புத்​தாண்டு ‘அனைவருக்​கும் அனைத்​தும்’ என்ற சமூகநீதி வளரும் புத்​தாண்​டாக, வலிவும், பொலி​வும் ஆன வாழ்க்கை​யாக, சுயமரி​யாதை வாழ்வாக அமையட்டும்.

மேலும், புதுச்​சேரி மற்றும் தெலங்​கானா முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​தரராஜன், பாமக தலைவர் அன்புமணி, பாஜக பிரமுகர் ஆர்.சரத்​கு​மார், ஐஜேகே தலைவர் ரவி பச்​ச​முத்து, இந்திய கிறிஸ்தவ மதச்​சார்​பற்ற கட்சி​யின் தலைவர் எம்.எஸ்​.​மார்​டின், தமிழ்​நாடு ​முஸ்​லிம் லீக் கட்சி நிறுவன தலை​வர் ​விஎம்​எஸ் ​முஸ்​தபா உள்​ளிட்ட தலை​வர்​களும் புத்​தாண்டு வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்