அரசு நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலின், அப்படியே மாவட்ட திமுக-வினரையும் சந்தித்து தேர்தலுக்கு தயாராவது குறித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசிச் சென்றிருக்கிறார்.
2026-ல் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுக-வும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இவர்களுக்கு மத்தியில், பாஜக தலைவர் அண்ணாமலையும் சாட்டையும் கையுமாக ஆட்சியைப் பிடிக்கும் உத்திகளை கையாண்டு வருகிறார். திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணியமாட்டேன் என அவர் செய்திருக்கும் சபதத்தை, “அப்படியானால் வாழ்நாளில் இனி அண்ணாமலை செருப்பு அணியவே முடியாது” என பரிகாசம் செய்கிறது திமுக.
இப்படியான சூழலில், ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட மொத்தமே 172 நிர்வாகிகளுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கடந்த 5 தேர்தல்களின் முடிவுகளை புள்ளிவிவரத்துடன் கையில் வைத்துக் கொண்டு பேசினார் முதல்வர். எந்தெந்த தேர்தல்களில், எந்தெந்த தொகுதிகளில் திமுக குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் அவர் துருவினார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு சென்றது குறித்து வருத்தப்பட்ட முதல்வர், “இந்தத் தேர்தலில் அப்படியான நிலை எதுவும் வரக்கூடாது” என அழுத்தமாக ஆணையிட்டார். “இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் இம்முறை நாம் வென்றாக வேண்டும். கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக பணியாற்றி திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
2026 மிக முக்கியமான தேர்தல். இதில் நிச்சயமாக நாம் 200 தொகுதிகளை வென்றாக வேண்டும். அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டும். நமது அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் முதல்வர்.
இம்முறை தன்னோடு புகைக்கப்படம் எடுக்க விருப்பப்பட்ட நிர்வாகிகளுடன் பொறுமையாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார் முதல்வர். இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் உற்சாகமாக காணப்பட்டவர், சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் நடந்தே சென்று மக்களோடு கைகுலுக்கினார். ஒரு குழந்தையை கையில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். சிலருக்கு அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் சிக்கியது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், “தேர்தல் பணிகள் தொடர்பாக முதல்வர் எங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இம்முறை கழகத்தினரிடம் முதல்வர் நடந்து கொண்ட விதமே வித்தியாசமாக இருந்தது. 200 தொகுதிகளில் எப்படியாயினும் வெல்ல வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அவரது அறிவுரைகள் எங்களுக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் இம்முறை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி தான் வென்றெடுக்கும் பாருங்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago