“எந்தக் கட்சியில் கருத்து மோதல் இல்லை..?” - முகுந்தன் நியமன சர்ச்சையை பேசுகிறார் பாமக வழக்கறிஞர் பாலு

By எஸ். நீலவண்ணன்

பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணியும் வெளிப்படையாக எதிர்க்கருத்தை எடுத்துவைத்து மோதிக் கொண்டது தமிழக அரசியலில் விவாதப் பொருளானது. அதேசமயம், முதல் நாள், தந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்ட அன்புமணி மறுநாளே கட்சி நிர்வாகிகள் சகிதம் தேடிப்போய் ராமதாஸை சந்தித்துப் பேசியது பலருக்கும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

இதற்கு நடுவில், கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸால் அறிவிக்கப்பட்ட அவரது பேரன் முகுந்தன், தான் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை என அறிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்​திலிருந்து புறப்பட்ட அன்புமணி சென்னை ஈசிஆரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்​பி​விட்​டார்.

இதை அப்படியே விட விரும்பாத பாமக நிர்வாகிகள் சிலர், அன்று மாலையே ராமதாஸையும் அன்புமணி​யையும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து ஞாயிற்றுகிழமை தைலாபுரம் தோட்டத்​துக்கு வந்த அன்புமணி, தந்தை​யுடன் மனம்விட்டுப் பேசினார். அப்போது பாமக சமூக நீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்​ட​வர்கள் உடனிருந்​தனர்.

சுமார் ஒரு மணி நேர பேச்சு​வார்த்​தைக்குப் பிறகு செய்தி​யாளர்​களிடம் பேசிய அன்புமணி, “இது ஜனநாயக ரீதியில் செயல்​படும் கட்சி, பொதுக்​குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜம். இது எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்​சினை. நாங்கள் பேசிப்​போம்; நீங்கள் யாரும் விவாதிக்க வேண்டாம்” என்றார்.

தனது அக்காள் மகனுக்கு தனது மகளை கொடுத்​திருக்கும் அன்புமணிக்கு, தனது மருமகனின் தம்பியான முகுந்​தனுக்கு இளைஞரணி பதவி கொடுப்​பதில் என்ன பிரச்சினை என பாமக சீனியர்கள் சிலரிடம் கேட்டோம். “திமுக-வை விமர்​சிப்பது போல் பாமக மீதும் விமர்​சனங்கள் வந்து​விடக் கூடாது என்பதால் தான் முகுந்​தனுக்கு பதவி கொடுக்க எதிர்க்​கிறார் அன்புமணி. மேலும், மற்றவர்களாக இருந்தால் விரட்டி வேலை வாங்க முடியும். ஆனால், அக்காள் மகனிடம் அப்படி நடந்து​கொள்ள கொள்ள​முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்​கலாம்” என்றனர்.

இது தொடர்பாக பாமக சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு​விடமும் பேசினோம். “பொதுக்​குழுவில் ஜனநாயக முறைப்படி கருத்துப் பரிமாற்றம் நடப்பது ஒரு சாதாரண விஷயம். எந்தக் கட்சியில் கருத்து மோதல் இல்லை..? பொதுக்குழு என்றாலே கருத்துகளை விவாதிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் அடித்​துக்​கொள்​வார்கள். அதன்பின் கருத்​தொற்றுமை உருவாகும். பாமக இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பான கருத்தும் விவாதம் தான். ஆனால், நிறுவனர், தலைவர் என்பதை கடந்து அப்பா, மகன் என்பதால் ஊடகங்கள் இதை பெரிதாக்கு​கின்றன.

திமுக-வில் நடக்காத சண்டைகளா? மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவல​கத்தையே கொளுத்​தி​னார்கள். தற்போது இருவரும் ஒன்றாக இருக்​கிறார்கள். தமிழக மக்கள் நலன் சார்ந்த 30 தீர்மானஙகள் பொதுக்​குழுவில் நிறைவேற்​றப்​பட்டது. இதுதான் மக்களுக்கான செய்தி. ஆனால், கடைசி 2 நிமிடங்கள் மட்டுமே நடந்த நியமனம் தொடர்பான கருத்து விவாதத்தை மட்டுமே ஊடகங்கள் பெரிது படுத்து​கின்றன.

ஞாயிற்றுகிழமை தைலாபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்​தில், கட்சி வளர்ச்சி, சட்டமன்ற தேர்தல், விவசாய மாநாடு பற்றி விவாதித்​தோம். இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவது குறித்​தும், சாதி வாரி கணக்கெடுப்பு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பெறுவது போன்ற நடவடிக்கை​களில் ஈடுபடுவது குறித்தும் விவாதித்​தோம். முகுந்தன் நியமன பிரச்சினை குறித்​துத்தான் விவாதித்தோம் என்று சொல்வது தவறு.

அனைவரும் சேர்ந்து எடுக்​கப்பட்ட முடிவின்​படியே முகுந்தன் இளைஞரணி தலைவராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். ஊடகங்கள் எது மக்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய செய்தியோ அதை வெளியிட வேண்டும். அதைவிடுத்து, கடைசியாக சில நிமிடங்கள் நடந்த ஒரு விவாதத்தை மட்டும் பெரி​தாக்க நினைப்பது ஊடக அறமில்லை” என்​றார் ​பாலு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்