முதுமலை: கோவையில் பெண் யானை உயிரிழந்த நிலையில் குட்டியை யானை கூட்டம் சேர்த்து கொள்ளாததால், குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிச.24-ம் தேதி பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் 30 வயதுமிக்க பெண் யானை உயிரிழந்தது. இதனிடையே 2 மாதமே ஆன குட்டியை மீட்ட வனத்துறையினர் யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தனர்.
கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார், கோவை வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். வனப்பணியாளர்கள் சுமார் 3 குழுக்களாகப் பிரிந்து ட்ரோன் உதவியுடன் யானை கூட்டத்தின் நடமாட்டம் அறிந்து, அதைத் தொடர்ந்து சென்று குட்டியை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இரண்டு யானை கூட்டமும் குட்டியை சேர்த்துக் கொள்ளாமல் சென்றன.
வனத்துறையின் முயற்சி தோல்வி அடைந்ததால், குட்டியானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குட்டி யானை நேற்று இரவு முதுமலை முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
இது முதுமலை வனச்சரகர் சிவகுமார் கூறியதாவது: கோவை வனக் கோட்டம் , கோவை வனச்சரகத்தில் தாய் இறந்த நிலையில் உள்ள யானை குட்டியை அதன் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்கபட்டது. ஆனால் யானை குட்டி கூட்டத்துடன் சேரவில்லை.
அதனால் தாயை இழந்த குட்டி யானையை முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமுக்கு நேற்று இரவு மாலை கொண்டு வரப்பட்டது. முகாமில் குட்டி பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் தாயைப் பிரிந்த ஒரு குட்டி யானை, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை, கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து குட்டி யானை ஆகியவை முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இவற்றில் இரண்டு குட்டி யானைகள் உடல் நலகுறைவு ஏற்பட்டு உயிரிழந்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago