பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள்: விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்​ரோ​வின்​ ஸ்​பேடெக்​ஸ்​ திட்​டத்​தின்​ இரட்​டை ​விண்​கலன்​கள், பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட்​ மூலம்​ வெற்​றிகரமாக ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டு, திட்​டமிட்​டபடி சுற்​றுப்​பாதையில்​ நிலைநிறுத்​தப்​பட்​டன.

எதிர்​கால தேவையை கருத்​தில்​​கொண்​டு ‘பாரதிய அந்​தரிக்​ ஷா ஸ்​டேஷன்​’ எனும்​ இந்​திய ஆய்​வு மையத்​தை 2035-ம்​ ஆண்​டுக்​குள்​ ​விண்​வெளியில்​ நிறுவ இந்​திய ​விண்​வெளி ஆய்​வு நிறுவனம்​ (இஸ்​ரோ) முடிவு செய்​துள்​ளது. இந்​த திட்​டத்​தின்​ முதல்​கட்​ட ​விண்​கலங்​கள்​ 2028-ம்​ ஆண்​டு ​விண்​ணில்​ செலுத்​தப்​பட உள்​ளன. அதற்கான முன்​தயாரிப்​பு பணிகளில்​ இஸ்​ரோ ஈடுபட்​டுள்​ளது.

அதன்​ ஒருபகுதியாக ஸ்​பேடெக்​ஸ்​ எனும்​ திட்​டத்​தின்​கீழ்​ ​விண்​ணில்​ ​விண்​கலன்​களை ஒருங்​கிணைக்​கும்​ பணிகள்​ தற்​போது மேற்​​கொள்​ளப்​பட உள்​ளன. இதற்​காக ஸ்​பேடெக்​ஸ்​ ஏ மற்​றும்​ ஸ்​பேடெக்​ஸ்​ பி என இரு ​விண்​கலன்​களை தனியார்​ நிறுவன பங்​களிப்​புடன்​ இஸ்​ரோ வடிவமைத்​தது. ஆந்​திர மாநிலம்​ ஸ்ரீஹரிகோட்​டா​வில்​ உள்​ள சதீஷ் தவான்​ மையத்​தின்​ ஏவுதளத்​தில்​ இருந்​து இந்​த ​விண்​கலங்​களை ​விண்​ணில்​ ஏவுவதற்​கான பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட்​டின்​ 25 மணி நேர கவுன்​ட்​டவுன்​ நேற்​று முன்​தினம்​ தொடங்​கியது.

திட்​டமிட்​டபடி ராக்​கெட்​ நேற்​று இரவு 10 மணிக்​கு ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டது. சுமார்​ 15 நிமிடத்​தில்​ தரையில்​ இருந்​து 476 கி.மீ உயரத்தில் விண்​கலங்​கள்​ வெற்​றிகரமாக நிலைநிறுத்​தப்​பட்​டன. இந்​த இரட்​டை ​விண்​கலன்​கள்​ தலா 220 கிலோ எடை ​கொண்​டவையாகும்​. தற்​போது ஒன்​றன்​பின்​ ஒன்​றாக சுற்​றிவரும்​ ​விண்​கலங்​களை அடுத்​த 2 வாரங்​களில்​ ஒன்​றிணைக்​கும்​ பணிகள்​ மேற்​​கொள்​ளப்​படும்​.

மனிதர்​களை ​விண்​ணுக்​கு அனுப்​பும்​போது ஒரு ​விண்​கலத்​தில்​ இருந்​து மற்​றொன்​றுக்​கு அவர்​கள்​ மாறவும், எரிபொருளை மாற்​றிக்​ ​கொள்​வதற்​கும்​ இந்​த தொழில்​நுட்​பம்​ பயன்​படும்​. இந்​த திட்​டம்​ வெற்​றி பெற்​றால்​ வல்​லரசு நாடுகளை போன்​று ​விண்​வெளியில்​ இந்​தியாவாலும்​ ஆய்​வு மையத்​தை அமைக்​க முடி​யும். அதனுடன்​ ககன்​யான், சந்​திரயான்​-4 திட்​டங்​கள்​ மற்​றும்​ எதிர்​கால ​விண்​வெளி ஆராய்​ச்​சி நடவடிக்​கைகளுக்​கு உத​விகரமாக அமை​யும்​. மேலும்​, இந்​த சாதனையை அடை​யும்​ 4-வது நாடு என்​ற பெருமையை​யும்​ இந்​தியா பெறும்​.

இதுத​விர பிஎஸ்​எல்​​வி ராக்​கெட்​டின்​ இறுதி பகுதியான பிஎஸ்​-4 இயந்​திரத்​தில்​ போயம்​ எனும்​ பரிசோதனை முயற்​சி​யும்​ 4-வது முறையாக வெற்​றிகரமாக மேற்​​கொள்​ளப்​பட்​டது. அதாவது, பிஎஸ்​-4 இயந்​திரத்​தை இருமுறை நிறுத்​தி மீண்​டும்​ இயக்​கி, அதன்​ உயரமானது 365 கி.மீட்​டருக்​கு கீழே ​கொண்​டுவரப்​பட்​டது. இதில் 24 ஆய்​வுக்​ கரு​விகள்​ இடம்​ பெற்​றுள்​ளன. இவை பு​வியை வலம்​ வந்​தபடி அடுத்​த சில மாதங்​களுக்​கு போடிக்​, செயற்​கை நுண்​ணறிவு, உயிரி தொழில்​நுட்​பம்​ தொடர்​பான ஆய்​வுகளை ​முன்​னெடுக்​க உள்​ளதாகவும்​ இஸ்​ரோ ​தெரி​வித்துள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்