தேர்தலுக்குத் தேர்தல் கரையும் அமமுக! - கட்சியைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறார் டிடிவி?

By ச.கார்த்திகேயன்

தமிழகத்தின் அடுத்த முதல்வர், அதிமுக-வின் அடுத்த பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தான் என்கிற நிலை 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிலவியது. அப்போது பழனிசாமி முதல்வராக இருந்தாலும், அதிகாரமெல்லாம் டிடிவி-யிடம் தான் இருந்தது.

​முதல்​வ​ராகும் கனவோடு தான் ஆர்.கே.நகர் இடைத்​தேர்​தலில் அதிமுக சார்​பில் தினகரன் போட்​டி​யிட்​டார். அப்போதே தேர்தல் நடந்​திருந்​தால் தினகரன் நினைத்தது கைகூடி இருக்​கும். ஆனால், யாரும் எதிர்​பாராத வகையில் அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்​டது. அதன் தொடர்ச்​சியாக சசிகலா​வை​யும் தினகரனை​யும் கட்சி​யை​விட்டு நீக்​குமளவுக்கு துளிர்​விட்​டார் பழனி​சாமி. இதன் பிறகு வந்த ஆர்.கே.நகர் இடைத்​தேர்​தலில் சுயேட்​சையாக போட்​டி​யிட்டு வென்​றார் தினகரன்.

அதைத் தொடர்ந்து, அதிமுக-வை துரோகி​களிட​மிருந்து மீட்​போம் எனச் சொல்லி வந்த தினகரன், அதுவரைக்​குமான தற்காலிக ஏற்பாடாக அமமுக என்ற கட்சியை தொடங்​கி​னார். அப்போது சிறை​யில் இருந்த சசிகலா, அமமுக​-வுக்கு ஆதரவும் தரவில்லை எதிர்ப்பும் காட்​ட​வில்லை என்பது வேறு விஷயம். இந்த நிலை​யில், 2019 மக்களவை தேர்தல் தொடங்கி அடுத்து வந்த அத்தனை தேர்​தல்​களி​லும் படுதோல்வி கண்டது அமமுக.

இதனால் தேர்​தலுக்​குத் தேர்தல் அமமுக கொஞ்சம் கொஞ்​சமாக கரைய ஆரம்​பித்​தது. இதைப் புரிந்து கொண்டு திடீரென கடந்த மக்கள​வைத் தேர்தல் சமயத்​தில் ஓபிஎஸ்​-சுடன் கைகோத்​தார் டிடிவி. இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்​பார்கள் என்று பேசப்​பட்ட நிலை​யில், “கட்​சியை அதிமுக​-வுடன் இணைக்​கும் திட்​ட​மில்லை” என அறிவித்​தார் டிடிவி. இது அவரிடம் மிச்சம் சொச்​சமிருந்த ஜெ. விசு​வாசிகளை​யும் சிந்​திக்க வைத்​தது.

தினகரனின் தெளிவற்ற அரசியல் பயணத்​தால் திக்​குத் தெரி​யாமல் நிற்​கும் அமமுக தொண்​டர்​கள், “எப்​படி​யும் அதிமுக-வை மீட்டு வழிநடத்து​வார் என்ற நம்பிக்கை​யில் தான் தினகரன் தலைமையை ஏற்றோம். ஆனால், தொண்​டர்​களின் உணர்​வு​களைப் புரிந்​து​கொள்​ளாமல் தனி கட்சி தொடங்கிய அவர், கடந்த தேர்​தலில் பாஜக​-வுடன் கைகோக்​கும் நிலைக்கு தடுமாறி​விட்​டார். இதனால் தினகரனுக்கு ஆதரவாக இருந்த சிறு​பான்மை மக்களும் இப்போது அவரைக் கைவிட்டு​விட்​டார்​கள்.

அதைச் சரிக்​கட்ட, தென் மாவட்​டங்​களில் தேவரினத்து வாக்​குகளை ஒருங்​கிணைக்​கும் முயற்சி​களி​லும் அவர் முழு​மையாக ஈடுபட்​டதாக தெரிய​வில்லை. அதனால் தான் தென்​மாவட்ட அமமுக-​வினரும் அதிமுக​-வுக்கு திரும்​பிக் கொண்​டிருக்​கிறார்​கள். ஆனால், கள நிலவரம் என்னவென்று சரியாக தெரிந்​து​கொள்​ளாமல் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்​தால் கட்சி வளர்ந்​து​விடும் என நினைக்​கிறார் தினகரன்.

ஆர்.கே.நகரில் தினகரன் வென்​ற​போது அவருக்கு துணையாக அதிமுக எம்எல்​ஏ-க்கள் 18 பேர் இருந்​தனர். செந்​தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்​செல்வன் அதில் முக்​கிய​மானவர்​கள். ஆனால், தனது செயல்​பாடு​களால் அவர்​களை​யும் இழந்​து​விட்​டார் தினகரன். இனியும் இப்படியே போனால் கட்சி​யில் அவர் மட்டும் தான் மிச்சம் இருப்​பார். இதைப் புரிந்​து​கொண்டு அவர் எதார்த்த அரசி​யலுக்கு திரும்ப வேண்​டும் மக்கள் பிரச்​சினைகளை கையிலெடுத்து போராடி கட்சி​யைக் காப்​பாற்ற வேண்​டும்” என்கிறார்கள்.

அமமுக மூத்த நிர்​வாகி​களோ, “தினகரனை வைத்து ஆதாயம் பார்க்​கலாம் என நினைத்​தவர்கள் எல்லாம் 2021 சட்டமன்றத் தேர்​தலின் போதே விலகி ஓடிவிட்​டனர். இப்போது அவரைச் சுற்றி இருப்​பவர்கள் எல்லாமே உண்மையான விசு​வாசிகள். அதேபோல், இதற்கு முந்தைய தேர்தல் முடிவுகள் அமமுக​-வுக்கு சாதகமாக இல்லாமல் போயிருக்​கலாம்.

ஆனால், 2026 தேர்தலில் பாமக துணை​யுடன் வட மாவட்​டங்​களி​லும் பாஜக துணை​யுடன் தென் மாவட்​டங்​களி​லும் அமமுக கணிசமான தொகு​திகளை கைப்​பற்றும். அதற்கான ​வியூ​கங்களை டிடிவி வகுப்​பார்” என்​கிறார்​கள். ஆடிக் ​காற்​றடிக்​கும் தமிழக அரசியலில் அம்​மிகளே அ​திரலாம் ​போல் இருக்கை​யில் அமமுக என்ன செய்​யப்​போகிறது என்​று ​பார்​க்​கலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்