தூத்துக்குடி: “மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதுதான் பெரியார் கண்ட கனவு.” என்று தூத்துக்குடியில் நடந்த புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார் . இந்த திட்டத்தால் 75,028 மாணவிகள் பயனடைவார்கள்.
திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆயிரக்கணக்கான மாணவிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது ஒரு திராவிடியன் ஸ்டாக் (Dravidian Stock)-காக பெருமையடைகிறேன். இதற்கு நேர் எதிராக ஒரு ஸ்டாக் இருக்கு. அது சாதி, மதம் என நம்மை பிரிக்கும் ஸ்டாக். வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வன்முறையை தூண்டிவிடும் வன்மம் பிடித்த Stock. பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்ற மனுவாத சிந்தனையை இந்த காலத்திலும் பேசிக்கொண்டு இருக்கும் காலவதியான ஸ்டாக்.
மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதைத்தான் தந்தை பெரியார் நினைத்தார்.
» அதிமுக பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்: இபிஎஸ்
» அரசு பள்ளிகளில் இணைய வசதிக்கான சேவை கட்டணம்: பள்ளி கல்வி துறை ரூ.3.26 கோடி நிதி விடுவிப்பு
அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தைக் கொண்டு நீதிக்கட்சி கொண்டு வந்தது. பட்டியலின மாணவர்களை அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்க நீதிக்கட்சி உத்தரவிட்டது. கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகளை நீதிக்கட்சி மேற்கொண்டது. காமராஜர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் தொடங்கப்பட்டது. 1967ல் அண்ணாவின் அரசியல் புரட்சி பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
அதன்பின்னர், கலைஞர் கல்லூரிக் கல்வியில் அதிகப்படியான கவனம் செலுத்தினர். அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 97 கல்லூரிகளைத் திறந்தார். அந்த வழித்தடத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள திராவிட மாடல் அரசு கொண்டு வருகிறது. கல்லூரி, உயர் கல்வி, ஆராய்ச்சிக் கல்விக்கும் திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் தருகிறது.
கட்டணமில்லா இலவசப் பயணத் திட்டத்தால் இதுவரை 527 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை பெண்களுக்கு திராவிட மாடல் அரசு வழங்குகிறது. இந்த வரிசையில் தான் புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுவதால், கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை விகிதம் கூடுகிறது என்ற புள்ளிவிவரத்தை ஆய்வறிக்கையில் படித்து மகிழ்ந்தேன். திட்டத்தினை உருவாக்கிய நோக்கம் நிறைவேறியதாக பெருமை அடைந்தேன்.
மாணவிகளின் படிப்புக்கு மட்டும் அல்ல, வேறு எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன். இந்த திட்டமெல்லாம் மாணவிகளுக்கு மட்டும்தானா மாணவர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுந்தததைத் தொடர்ந்து நிதிச் சிக்கல்களையும் மீறி ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை மாணவர்களுக்காக தொடங்கினோம். உயர் கல்வி திட்டத்துக்கு எந்த நெருக்கடி இருந்தாலும் அதை கண்டு கொள்ளாது நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்று தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கினோம்.
ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. புதுமைப் பெண் திட்டத்தால் உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் உருவார்கள். அதன் காரணமாக தமிழகத்தில் தொழில் தொடங்க ஏராளமான வெளிநாட்டவர் இங்கே வருவார்கள். பாலின சமத்துவம் கூடும். குழந்தை திருமணம் குறையும். உயர் கல்வி கற்காத பெண்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கும் வரை ஓய மாட்டேன். புதுமைப் பெண்களே படிங்க, படிங்க, படிங்க. படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துதர நான் இருக்கிறேன். அரசு இருக்கிறது. இது போட்டி நிறைந்த உலகம். அதனால் ஒரு பட்டத்தோடு நிறுத்தாமல், மேற்கொண்டு படிங்கள். திருமணத்துக்குப் பின்னரும் வேலைக்குச் செல்லுங்கள். இன்று ரூ.1000 உதவி பெறும் நீங்கள், நாளை பலருக்கும் உதவி செய்ய வேண்டும். வழிகாட்ட வேண்டும். புதுமைப் பெண் திட்டத்தால் நான் இந்த உயரத்தை அடைந்தேன் என்று பின்னாளில் நீங்கள் யாரேனும் என்னிடம் சொன்னீர்கள் என்றால் அதுவே எனக்கான வெற்றி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago