முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை: 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார். நியோ டைடல் பூங்கா திறப்பு, புதுமைப் பெண் விரிவாக்க திட்டம் தொடக்கம் என 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

இதுகுறித்து தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்றும் (டிச. 29), நாளையும் தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தருகிறார். இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பூங்காவை அவர் திறந்துவைக்கிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு - தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

நாளை காலை 8.30 மணியளவில் காமராஜ் கல்லூரியில் நடைபெறும் விழாவில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைக்கிறார். பின்னர் கன்னியாகுமரி செல்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்