“சாட்டையால் அடித்துக் கொண்டாலும்...” - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “திமுகவை ஒழித்துக் கட்டவேண்டும் என்று சிலர் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொள்வதும், செருப்பு அணிய மாட்டேன் என்று கூறிக்கொண்டு செயல்பட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி எதிரே உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், டி.பி.எம் மைதீன்கான், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 3 தொகுதிகளை வென்றோம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளையும் வெல்வது உறுதி. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரை வெற்றி பெற செய்யவேண்டும்.

அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா நிகழ்விற்காக கன்னியாகுமரிக்கு 30-ம் தேதி வரும் முதல்வருக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பில் பாளையங்கோட்டை - நெல்லை தொகுதி சார்பில் கேடிசி நகரிலும், நாங்குநேரி - அம்பாசமுத்திரம் தொகுதி சார்பில் நாங்குநேரியிலும், ராதாபுரம் தொகுதி சார்பில் வள்ளியூரிலும் ஒவ்வொரு இடத்திலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சிலர் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொள்வதும், செருப்பு அணிய மாட்டேன் என்று கூறிக்கொண்டு செயல்பட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும், அந்த தெம்பையும் இருப்பையும் காட்டவே இந்தக் கூட்டம்” என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., அவை தலைவர் வி.கே. முருகன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாநில மகளிரணி துணை செயலர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்