தமிழகத்தில் ஜன.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வட தமிழகத்​தில் வடகிழக்​குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்படி வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் மழை பெய்​துள்ளது. அதிகபட்​சமாக திரு​வள்​ளூர் மாவட்டம் திருத்​தணி​யில் 8 செமீ மழை பதிவாகி​யுள்​ளது.

புதுச்​சேரி, காரைக்​கால்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்​கடல் பகுதி​களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. இதன் காரணமாக தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களி​லும் இன்றும், நாளை​யும் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும்.

அதிகாலை வேளை​யில் ஒரு சில இடங்​களில் லேசான பனி மூட்டம் காணப்​படும். 30, 31-ம் தேதிகளில் ஒரு சில இடங்​களி​லும், ஜன.1-ம் தேதி தென் தமிழகத்​தில் ஒரு சில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், 2-ம் தேதி தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில், லேசான மழை பெய்​யக்​கூடும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்