மாணவி பாலியல் துன்புறுத்தல்: பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் வரவில்லை - அமைச்சர் கோவி.செழியன்

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்​கழகத்​தில் நேற்று ஆய்வு மேற்​கொண்ட உயர்​கல்​வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

அண்ணா பல்கலைக்​கழகத்​தில் கடந்த 23-ம் தேதி நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பாக 25-ம் தேதி காவல்​துறை​யில் புகார் செய்​யப்​பட்​டது. புகார் மனு பெற்ற குறுகிய காலத்​திலேயே அந்த நபர் கைது செய்​யப்​பட்​டார். தொடர்ந்து விசாரணை நடந்​து​ கொண்​டிருக்​கிறது.

பல்கலைக்​கழகத்​தில் நடந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்​டிக்கு (பாலியல் துன்​புறுத்தல் தடுப்பு குழு) புகார் வரவில்லை. அதேநேரத்​தில் காவல்​துறை​யில் புகார் செய்​யப்​பட்டு விசாரணை நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்​வாகம் காவல்​துறை விசா​ரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்​கும். இதற்​கிடையே தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இருப்​பதாக அறிவித்​திருக்​கிறது. அதற்​கும் தமிழக அரசும், உயர்​கல்​வித் துறை​யும், பல்கலைக்கழக நிர்​வாக​மும் முழு ஒத்துழைப்பு தரும்.

சட்டம் தனது கடமை​யைச் செய்து விசாரணை நடந்​து​கொண்​டிருக்​கும் நிலை​யில், மாணவிக்கு நேர்ந்த பிரச்​சினையை அரசி​ய​லாக்க சிலர் முயல்​கின்​றனர். நாங்கள் அதற்கு அனும​திக்க மாட்​டோம். இந்த சம்பவத்தை ஒரு படிப்​பினை​யாகக் கொண்டு வரும் காலத்​தில் செயல்​படு​வோம். இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள நபரின் மனைவி அண்ணா பல்கலைக்​கழகத்​தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் அந்த நபர் பல்கலைக்​கழகத்​துக்கு அடிக்கடி வந்து​போ​யுள்​ளார். அதனால், அவர் மீது பாது​காப்பு ஊழியர்​களுக்கு சந்தேகம் எழவில்லை.

நடந்த தவறு தவறு​தான். தற்போது இந்த சம்பவம் குறித்து விசா​ரிக்க ஒரு கமிட்​டியை அமைத்​துள்ளோம். இனி இத்தகைய குற்​றங்கள் நிகழாது என்ப​தற்கு 100 சதவீதம் உத்தர​வாதம் அளிக்​கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்​டிக்கு புகார் வரவில்லை. காவல்​துறை​யில் புகார் பெறப்​பட்டு அதன் அடிப்​படை​யில்​தான் அந்த நபர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சம்பவம் நடந்த இடம் கண்காணிப்பு கேமரா​வுக்கு உட்படாத பகுதி. இந்த சம்பவத்​துக்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்​தில் எந்த இடமும் இருட்டாக இருக்​கக் கூடாது என்பதை கருத்​தில்​கொண்டு தேவையான மின்​விளக்​குகளை பொருத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இனிமேல் வெளிநபர்கள் யார் வந்தா​லும் அடையாள அட்டையை காண்​பித்து​விட்டு பதிவு செய்​து​விட்டு​தான் செல்ல வேண்​டும் என்று சொல்​லி​யுள்​ளோம்.

இனிவரும் காலத்​தில் கல்வி வளர்ச்​சிக்கு எந்தெந்த வழிகளில் ஆய்வு மேற்​கொள்​கிறோமோ, அதேபோல், போஷ் கமிட்​டி​யின் செயல்​பாடுகள் என்ன, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்​டுள்ளன என்ப​தை​யும் ஆய்வு செய்​யு​மாறு ​முதல்​வர் எங்​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார். இவ்​வாறு அமைச்​சர் கூறினார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்