சென்னை: தமிழகத்தில் உள்ள அத்துணை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ராமேஸ்வரம், பழனி, திருச்செந்தூர், மதுரை , ஸ்ரீரங்கம், கும்பகோணம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாதம்தோறும் வருகின்றனர். இது தவிர அந்தந்த கோயில்களுக்கென்று இருக்கின்ற விசேஷங்கள், விழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகும்.
வரக்கூடிய பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கவும், துன்பகள் தீர்ந்து குடும்பத்தில் நல்ல நிலை உருவாக வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். வரக்கூடிய பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதி வாய்ப்பற்ற சாதாரண மக்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு என இந்து சமய அறநிலைத்துறையால் போதுமான அளவில் தங்கும் இடம் மற்றும் குளியலறை, கழிப்பறை, உடைமாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.
இதனால் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தனியார்கள் நடத்துகின்ற தங்கும் விடுதிகள், குளியலறை, கழிப்பறை, உடைமாற்றும் அறைகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் பயன்படுத்தும் போது தனி நபர்கள் அந்த அறைகளில் ரகசிய கேமராவை பொருத்தி பெண்களின் படம் எடுக்கும் அவலம் ஏற்படுகிறது.
» அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை
» அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து கோவையில் அண்ணாமலை சாட்டையடி போராட்டம்
மேலும் அந்த அந்தரங்க வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களை இதனை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.
சமீபத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்தத்தில் தீர்த்தமாடி விட்டு தனியார் உடைமாற்றும் அறையில் உடை மாற்றிய பெண்ணைப் படம் பிடித்த நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இது எதோ ஒரு கோவிலில் நடக்கிறது என்று விட்டுவிட முடியாது. இதேபோன்று தமிழகம் முழுவதும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
இதனால் ஆலயத்திற்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பும் மற்றும் அவர்களின் கண்ணியத்திற்கு குறைபாடும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆலயத்திற்கு வரும் பக்தர்களுகளின் கண்ணியம் எந்த வகையிலும் குறைபாடு ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இருக்கிறது.
எனவே தமிழகத்தில் உள்ள அத்தனை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள்,கழிப்பறைகள் உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago