வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை அறிவித்தது. அதன்படி, கடந்த ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

அதன் பிறகு, அக்.29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவ.28-ம் தேதி வரை பெறப்பட்டது, இக்காலகட்டத்தில் கடந்த நவ. 16, 17 மற்றும் 23, 24 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த 4 நாட்கள் முகாமிலும் சேர்த்து, பெயர் சேர்க்க 8,38,016, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைப்புக்கு 783, பெயர் நீக்கம் செய்ய 1,19,701 மற்றும் திருத்தம் மேற்கொள்ள 4,42,111 என 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர, தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அந்த வகையில், கடந்த அக்.29 முதல் நவ.28 வரை, சிறப்பு முகாம்கள் மற்றும் நேரில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 901 விண்ணப்பங்கள், ஆன்லைன் வாயிலாக 5 லட்சத்து 38 ஆயிரத்து 490 விண்ணப்பங்கள் என மொத்தம் 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், பெயர் சேர்க்க மட்டும், ஆன்லைனில் 1,08,872, நேரடியாக 9,22,372 விண்ணப்பங்கள், பெயர் நீக்க ஆன்லைனில் 2,69,200, நேரடியாக 2,81,915 விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய ஆன்லைனில் 1,60,372, நேரடியாக 5,66,605 விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை நவ.29 முதல் தொடங்கப்பட்டு, டிச 24-ம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்தாண்டு ஜன.6 - ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்