குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா: ரூ.37 கோடியில் கண்ணாடி இழை பாலத்தை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ.37 கோடியில் வள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையிலான கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிச.30-ம் தேதி திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, வரும் டிச.30 முதல் ஜன.1-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முன்னதாக, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு நிறைவையொட்டி சில வெள்ளி விழாப் பணிகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என டிச.12-ம் தேதி முதல்வர் அறிவித்தார். இதற்காக, ரூ.10.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் - ரீல்ஸ் - ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ள இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிகள், வரும் டிச.30-ம் தேதி மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் தொடங்குகிறது. அப்போது, ரூ.37 கோடி செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார். விழாவில், திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்குகிறார். மாலை 7 மணிக்கு, சுகி.சிவம் தலைமையில் “திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே – சமுதாயத்துக்கே" எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

மறுநாள் டிச.31-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, பியானோ இசைக் கலைஞர் செல்வன் லிடியன் நாதஸ்வரத்தின் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் அரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 1.1.2025 புதன்கிழமை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, திருக்குறள் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து நினைவுப் பரிசுகள் வழங்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்