கழிப்பறை பிரச்சினை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் ‘வெளியே’ சொல்ல முடியாத அவஸ்தை!

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​துக்​குள் உள்ள கீழமை நீதி​மன்​றங்​களுக்கு வரும் பெண்​களும், வயதானவர்​களும் இயற்கை உபாதைகளை கழிக்க அவசரத்​துக்கு ஒதுங்க இடம் தேடி அலையும் நிலை கொஞ்சம் பரிதாப​மாகத்​தான் இருக்​கிறது. கிட்​டத்தட்ட 100 ஏக்கர் பரப்​பில் இயங்கி வரும் உயர் நீதி​மன்ற வளாகத்​தில், 70-க்​கும் மேற்​பட்ட கீழமை நீதி​மன்​றங்​களும், மாநில மற்றும் மாவட்ட சட்டப்​பணிகள் ஆணைக்​குழு போன்ற​வை​ இயங்கி வருகின்றன.

தவிர வழக்​கறிஞர்​களுக்கான சேம்​பர்​கள், சட்ட அலுவலர்​களுக்கான வளாகம், காவல் கட்டுப்​பாட்டு அறை, காவல் நிலை​யங்​கள், ரயில்வே முன்​ப​திவு மையம், தீயணைப்பு நிலை​யம், தபால் அலுவல​கம், இந்தியன் வங்கி, தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் போன்ற​வை​யும் உயர் நீதி​மன்ற வளாகத்​துக்​குள் இயங்கி வருகின்றன. தற்போது சராசரியாக உயர் நீதி​மன்ற வளாகத்​துக்​குள் ஊழியர்​கள், வழக்​கறிஞர்​கள், பொது​மக்​கள், போலீ​ஸார் என தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.

உயர் நீதி​மன்ற பாரம்​பரிய கட்டிடத்​துக்​குள் போதிய எண்ணிக்கை​யில் கழிப்​பறைகள் சுத்​த​மாக, பராமரிக்​கப்​பட்டு வருகின்றன. ஆனால் உயர் நீதி ​மன்ற வளாகத்​துக்​குள் குடும்பநல நீதி​மன்றம் அருகே ஒரே ஒருகட்டண கழிப்பறை மட்டுமே உள்ளது. இந்த கழிப்பறை எங்கு இருக்​கிறது என்பது பொது​மக்கள் பலருக்​கும் தெரிவ​தில்லை. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக உள்ள ஆவின் நுழைவா​யில் பகுதி​யில் பொது​மக்​களின் உபயோகத்​துக்கு எந்த கழிப்​பறை​யும் கிடை​யாது.

கே.விஷாலினி

இதுதொடர்பாக வழக்​கறிஞர் கே.விஷாலினி கூறுகை​யில், “வழக்​கறிஞர்​களுக்கு போதுமான கழிப்​பறைகள் இருக்​கின்றன. ஆனால் நீதி​மன்​றங்​களுக்கு வருகை தரும் பொது​மக்​களுக்​குத்​தான் போதிய கழிப்​பறைகள் இல்லை. இதனால் முதி​ய​வர்​களும், பெண்​களும் ஆவின் நுழைவா​யில் பகுதி​யில் அவசரத்​துக்கு ரெஸ்ட் ரூம் தேடி அலைவது வேதனையான விஷயம். குறிப்பாக பெண்கள் ரெஸ்ட் ரூம் எங்கு இருக்​கிறது என்பதை ஆண்களிடம் கேட்க முடி​யாமல் தர்ம சங்கடத்​தில் நெளிய நேரிடு​கிறது.

இதேபோல விசாரணை கைதி​கள், அவர்களை அழைத்து​வரும் பெண் போலீ​ஸாரின் நிலை​மை​யும் பரிதாபத்​துக்​குரியது. ஒரு சில வழக்​கறிஞர்கள் சங்கங்​களி​லும் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. குறைந்​த​பட்சம் ரெஸ்ட் ரூம் குறித்த அறிவிப்பு பலகைகளை ஆங்காங்கே வைத்​தாலாவது பெண்​களின் பிரச்​சினைக்கு தீர்வு கிடைக்​கும்.

டி.எஸ்.பார்த்தசாரதி

ஏற்கெனவே ஒரு வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றத்​தின் வெளியே கழிவுநீர் தேங்​காமல், சிறுநீர் கழிப்பிட பகுதி​களை​யும் பூந்​தொட்​டிகள் வைத்து அலங்​கரிக்க உத்தர​விட்​டது. ஆனால் அந்த உத்தரவு இன்று வரை அமல்​படுத்​தவில்லை” என்றார்.வழக்​கறிஞர் டி.எஸ்​.பார்த்​தசாரதி கூறுகை​யில், “எஸ்​பிளனேடு மற்றும் ஆவின் நுழைவா​யில் பகுதி​யில் தான் பொது​மக்​களின் நடமாட்டம் அதிகம்.

அதேபோல பார் கவுன்​சிலில் நடைபெறும் புதிய வழக்​கறிஞர்​களின் பதிவு நிகழ்வுக்கு பெற்​றோர், உறவினர்​கள், நண்பர்கள் என ஆயிரக்​கணக்​கானோர் திரு​விழா கூட்​டம்போல உயர் நீதி​மன்ற வளாகத்​துக்கு வெளியே காத்​திருக்​கின்​றனர். உயர் நீதி​மன்​றத்​துக்கு வெளியே மாநக​ராட்​சி​யால் பராமரிக்​கப்​படும் இலவச கழிப்​பறைகள் யாருக்​கும் பயனின்றி பூட்​டியே கிடக்​கிறது. இதனால் அவர்​களும் உயர் நீதி​மன்​றத்​துக்​குள் கழிப்​பறைகளை தேடி அலைகின்​றனர். அவசரத்​தில் ஆண்களும், பெண்​களும் உயர்நீதி​மன்​றத்​தின் சுற்றுப்​பகுதி நடைபாதைகளை சிறுநீர் கழிப்​பிடமாக மாற்றி விடு​வ​தால் நடமாட முடியாத நிலை உள்ளது.

உயர் நீதி​மன்ற சட்ட அலுவலர்கள் அலுவல​கம், கேண்​டீன் உள்ளிட்ட பகுதி​களில் தனிப்​பட்ட உபயோகத்​துக்காக பூட்டி வைக்​கப்​பட்​டுள்ள கழிப்​பறைகளை திறந்து யாராவது பயன்​படுத்​தினால், அவர்​களிடம் இரவல் கேட்டு ஆண், பெண் வித்​தி​யாசமின்றி கழிவறை​களைபயன்​படுத்​தும் அவலமும் நடக்​கிறது.

எனவே ஆவின் நுழைவா​யில் பகுதி​யில் வழக்​கறிஞர்கள் கேண்​டீனை அடுத்த பழைய கட்டிட இடிபாடு​களுடன் கிடக்​கும் பகுதி​யில் நிரந்​தரமாக சிறிய அளவில் கட்டண கழிப்பறை கட்டிக்​கொடுத்​தால் அது அனைத்து தரப்​பினருக்​கும் பேருதவியாக இருக்​கும். அதுவரை தற்காலிக ஏற்பாடாக மாநக​ராட்​சி​யின் இலவச மொபைல் கழிவறை வாகனங்களை ஆவின் நுழைவா​யில் அருகே நிறுத்​தினால் ரெஸ்ட் ரூம் தேடி அலையும் பெண்​களுக்கு நிம்மதி கிடைக்​கும் என்றார்.

இதுதொடர்பாக நீதித்​துறை வட்டாரத்​தில் கேட்​ட​போது, ஏற்கெனவே உயர்நீதி​மன்ற வளாகத்​தில் போதிய எண்ணிக்கை​யில் கழிப்​பறைகள் உள்ளன. தனியாக கட்டண கழிப்​பறை​யும் உள்ளது. கீழமை நிதி​மன்​றங்​களில் உள்ள கழிப்​பறைகளை பொது​மக்​களும் பயன்​படுத்தி வருகின்​றனர். அங்கு யாரை​யும், யாரும் தடுப்பது இல்லை. இருந்​தா​லும் ஆ​வின் நுழைவா​யில் மற்றும் உயர் நீ​தி​மன்​றத்​துக்கு வெளியே கூடு​தலாக கட்ட​ண கழிப்பறை அமைப்பது குறித்​தும், ​மாநக​ராட்​சி​யின் மொபைல் கழிவறை வச​திகளை ஏற்​படுத்தி ​கொடுப்பது குறித்​தும் அதிகாரி​களு​டன் ஆலோ​சித்து ​முடி​வெடுக்​கப்​படும்​ என தெரி​விக்​கப்​பட்​டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்