கானல் நீராக காஞ்சி பேருந்து நிலையம்: 7 ஆண்டாக இடம் தேர்வில் இழுபறி

By இரா.ஜெயபிரகாஷ்

​காஞ்​சிபுரம் மாநகருக்கு வெளி​யில் பேருந்து நிலையம் அமைக்க திட்​ட​மிடப்​பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலை​யில் இன்னும் இடம் தேர்வு செய்​வ​திலேயே இழுபறி நீடிக்​கிறது. காஞ்​சிபுரத்​தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் மாநகரின் மையப்​பகு​தி​யில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலை​யத்​தில் இருந்து வேலூர், சென்னை, வந்தவாசி, திரு​வண்ணா​மலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவடங்​களுக்​கும், தென்​மாவட்​டங்​கள், புதுச்​சேரி உள்ளிட்ட பகுதி​களுக்​கும் பேருந்​துகள் செல்​கின்றன. அனைத்து பேருந்​துகளும் காஞ்​சிபுரம் மாநகருக்​குள் வந்து செல்ல வேண்டி உள்ள​தால் போக்கு​வரத்து நெரிசல் ஏற்படு​கிறது.

காஞ்​சிபுரம் மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரம். ஒரகடம், ஸ்ரீபெரும்​புதூர் போன்ற பகுதி​களில்சிப்​காட் உருவாகி உள்ளது. அங்கு பணி செய்​யும் தொழிலா​ளர்​களுக்கான பேருந்​துகள் உட்பட பல்வேறு பேருந்​துகள் வந்து செல்​கின்றன.

இதனால் காஞ்​சிபுரம் நகரம் கடும் போக்கு​வரத்து நெரிசலை சந்திக்​கிறது.தற்போது இந்த போக்கு​வரத்து நெரிசலுக்கு தீர்வாக சென்னை செல்​லும் பேருந்​துகள் வெள்​ளை​கேட் வழியாக சென்று செல்​லும்​படி​யும், சென்னை​யில் இருந்து காஞ்​சிபுரம் வரும் பேருந்​துகள் பொன்னேரிக்கரை வழியாக செல்​லும்​படி​யும் ஒருவழி பாதையாக மாற்​றப்​பட்​டுள்ளன. மேலும் காந்தி வீதி உட்பட நகரின் பல்வேறு வீதி​களும் ஒரு வழிப் பாதையாக மாற்​றப்​பட்​டுள்ளன.

இந்த போக்கு​வரத்து நெரிசலை சரி செய்ய வேண்​டும் என்றால் பிரதான பேருந்து நிலை​யத்தை காஞ்​சிபுரம் நகருக்கு வெளியே அமைக்க வேண்​டும் என்ற கோரிக்கை பல ஆண்டு​களாக இருந்து வருகிறது. இந்நிலை​யில் காஞ்​சிபுரம் கீழ்​க​திர்​பூர் பகுதி​யில் 10 ஏக்கர் பரப்​பள​வில் புதிய பேருந்து நிலையம் அமைக்​கப்​படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி, எம்.ஜி.ஆர். நூற்​றாண்டு விழா​வில் அறிவித்​தார்.

இதற்காக ரூ.38 கோடி​யில் பேருந்து நிலையம் அமைக்க உடனடியாக அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டது. பேருந்து நிலை​யத்​துக்காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலம் அனாதீனம் நிலம். சில விவசா​யிகள் பயன்​பாட்​டில் இருந்​த​தால் அவர்கள் நீதி​மன்றம் சென்​றதை தொடர்ந்து பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை கூட போடாமல் தடை ஏற்பட்​டது.

இந்நிலை​யில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேருந்து நிலையம் அமைக்​கும் இடத்தை மாற்ற முடிவு செய்​யப்​பட்​டது. சித்தேரிமேடு, காரப்​பேட்டை உட்பட பல்வேறு இடங்களை ஆய்வு செய்​தும் இடத்தை தேர்வு செய்ய முடிய​வில்லை. கடந்த 7 ஆண்டு​களாக இடம்கூட தேர்வு செய்​யப்​படாமல் கிடப்​பில் போடப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாநகரின் போக்கு​வரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்​காமல் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலரான சீனுவாசன் என்பவரிடம் கேட்​ட​போது, ‘காஞ்​சிபுரம் மாநகரம் கோயில், பட்டுக்கு புகழ் பெற்ற நகரம் என்ப​தால் நகருக்கு வரும் மக்கள் அதிகம். பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதிக்​குள் வைக்​கப்​பட்​டிருப்​ப​தால் அனைத்​து பேருந்​துகளும் நகரத்​துக்​குள் வருகின்றன.

இதனால் போக்கு​வரத்து நெரிசல் அதிகரிக்​கிறது. நகருக்கு வெளியே பேருந்து நிலை​யத்தை அமைத்​தால் தேவை உள்ளவர்கள் மட்டும் உள்ளூர் பேருந்​துகள் மூலம் நகரத்​துக்​குள் வரலாம். அதன்​மூலம் போக்கு​வரத்து நெரிசலை குறைக்க முடி​யும்’ என்றார்.

இதுகுறித்து காஞ்​சிபுரம் மாநக​ராட்சி ஆணையர் நவேந்​திரனிடம் கேட்​ட​போது, ‘வரு​வாய் துறை​யுடன் இணைந்து பேருந்து நிலை​யத்​துக்காக இடம் தேர்வு செய்​யும் பணியை மேற்​கொண்டு வரு​கிறோம். இடம் தேர்வு செய்​யும் பணி ​முடிந்​தவுடன் ​விரை​வில் பேருந்து நிலை​யம் அமைப்​ப​தற்கான நட​வடிக்கை எடுக்​கப்​படும்​’ என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்