சென்னை: அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை முதல்வர் ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் இதுவரை கேட்காத விஷயங்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ரத்தம் கொதிக்கிறது. சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது. காவல்துறையில் அரசியலை கலந்து விட்டார்கள். ஒவ்வொரு குற்றமும் தமிழகத்தில் போட்டிப்போட்டுக் கொண்டு நடக்கிறது. காவல்துறையும், காவல்துறைக்கு பொறுப்பான முதல்வரும் மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி? பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்த பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறி விடாதா? சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்.
» சென்னை | வார இறுதி நாட்களில் 586 சிறப்பு பேருந்துகள்
» ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோயில் பிரம்மோற்சவம்: வெள்ளி ரத ஊர்வலம்
தவெக தலைவர் விஜய்: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது விரைவாக உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியை பயன்படுத்தி அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மனவலிமையுடன் தங்களை தாங்களே தற்காத்து கொள்வது தொடர்பாக போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே பெண்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது, குறிப்பாக கல்விக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், விடுதிகள் அனைத்திலும் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கூட்டு பாலியல் வன்தாக்குதலில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனரா என்பது போன்ற பல வினாக்கள் எழுகின்றன. இச்சம்பவம் தொடர்பான அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும்.
இதேபோன்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago