வெம்பக்கோட்டையில் பீங்கான், மாவுக்கல் மணிகள் கண்டெடுப்பு: அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

சாத்தூர்: ​விருதுநகர் மாவட்டம் வெம்​பக்​கோட்​டை​யில் நடைபெற்று​வரும் அகழாய்வில் பீங்​கானால் தயாரிக்​கப்​பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்​யப்​பட்ட நீள் வட்ட வடிவ மணிகள், அலங்​கரிக்​கப்​பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்​கப்​பட்டன.

விருதுநகர் மாவட்டம் வெம்​பக்​கோட்டை விஜயகரிசல்​குளத்​தில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. சுடுமண் உருவப் பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்​கள், வட்டச்​சில்லு, தங்கமணிகள் என‌ இதுவரை 2,850-க்​கும் மேற்​பட்ட பொருட்கள் கண்டெடுக்​கப்​பட்​டுள்ளன.

இந்நிலை​யில், புதிதாக தோண்​டப்​பட்ட குழி​யில் பீங்​கானால் தயாரிக்​கப்​பட்ட உருண்டை வடிவமணி, மாவு கற்களால் செய்​யப்​பட்ட நீள்வட்ட வடிவ மணிகள், அலங்​கரிக்​கப்​பட்ட சங்கு வளையல்கள் போன்றவை கண்டெடுக்​கப்​பட்​டுள்ளன. இதுகுறித்து அகழாய்வு இயக்​குநர் பாஸ்கர் கூறுகை​யில், புதிதாக கண்டெடுக்​கப்​பட்​டுள்ள இந்த பொருட்களை வட மாநிலங்​களில் இருந்து வாங்கி, பண்டைய தமிழர்​கள் வாணிபத்​தில் ஈடு​பட்​டுள்ளது தெரிய வரு​கிறது என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்