தென்காசி: கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டுவந்து சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படும் சம்பவங்கள் நீண்ட காலமாக தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கழிவுகள் கொண்டுவரப்படுவது பெருமளவில் தடுக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது கழிவுகளை கொண்டுவந்து கொட்டும் செயல் முழுமையாக நிறுத்தப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேசு பொருளானது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதன்பேரில் கேரள அதிகாரிகள் வந்து, இந்த கழிவுகளை லாரிகளில் ஏற்றி மீண்டும் கேரள மாநிலத்துக்கு கொண்டு சென்றனர். கொட்டப்பட்ட குப்பைகள் மீண்டும் அள்ளப்பட்டு, கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது.
அரசு நிலங்களில் குப்பைகளை கொட்டுவது ஒருபுறம் இருக்க தனியார் நிலங்களில் குப்பைகள் கொட்டப்படுவது ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயனற்று கிடக்கும் தனியார் நிலங்களின் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து, அதில் பிளாஸ்டிக் குப்பைகள், எலக்ட்ரானிக் குப்பைகள் போன்றவற்றை வாங்கி வந்து கொட்டுகின்றனர். அதில் இருந்து உபயோகப்படுத்தக்கூடிய, மறு சுழற்ச்சி செய்யக்கூடிய பொருட்களை தரம்பிரித்து எடுத்துவிட்டு, உபயோகமற்ற குப்பைகளை தீ வைப்பது, பள்ளங்களில் கொட்டி மண்ணைக் கொண்டு நிரப்புவது போன்ற செயல்கள் நடக்கிறது.
» ‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25-ல் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
» 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மத்திய அரசு அதிரடி
தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சமீபத்தில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி- செல்லத்தாயார்புரம் சாலையோரத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் தனியார் நிலத்தில் இதுபோல் பிளாஸ்டிக் கொப்பைகள் ஏராளமாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவி, அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து, குப்பைகளை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மண்ணைக் கொண்டு நிரப்பி மூடப்பட்டுள்ளது.
பணத்துக்கு ஆசைப்பட்டு மண்ணை பாழாக்கும் செயலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பழனி சங்கர் கூறும்போது, “கேரளாவில் இருந்து கழிவுகளை எடுத்து வருவதற்கு ஏராளமானோர் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். இவர்கள் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையோரங்ளில் உள்ள பயனற்ற நிலையில் உள்ள காலி இடங்களை குறிவைத்து, அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி, ஒப்பந்தம் செய்கின்றனர். பள்ளமான இடத்தில் குப்பைகளை கொட்டி, மண்ணைக் கொண்டு மூடிவிடுகிறோம் என்றும், இதற்கு மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
இதையடுத்து, கழிவுகளை வாங்கி வந்து தரம் பிரித்துவிட்டு, பயனற்ற கழிவுகளை தனியார் இடத்தில் 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி குப்பைகளை கொட்டி, நிரம்பியதும் மண்ணை கொண்டு நிரப்புகின்றனர். லாரி ஓட்டுநர்களிடம் ஒரு லோடுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பேசி, பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வருகின்றனர். கழிவுகளில் இருந்து அதிக வருவாய் பார்க்கும் இந்த தொழிலில் மிகப் பெரிய நெட்வொர்க் ஈடுபடுகிறது. அவர்கள் இயற்கை வளத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் மண்வளம் பாழாகி வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago