தமிழகத்தில் விரைவில் 1,000 மக்கள் மருந்தகங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: “மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜென்ரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு தமிழக முதல்வரால் தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகங்கள் கூட்டுறவுத் துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து இச்சேவை தொடங்கப்படவிருக்கிறது,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.23) சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளி விழா கலையரங்கத்தில் நடைபெற்ற தேசிய மருந்தாளுநர் மாநாட்டில் அறிவியல் மலரினை வெளியிட்டார். பிறகு சிறந்த மருந்தாளுநர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையில் உள்ள மருத்துவ வல்லுனர்களுக்கும் மற்றும் மருந்தியல் மாணவார்களுக்கும் பதக்கங்களையும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் அவர் பேசுகையில், “இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தற்போது தமிழகத்தின் மருத்துவ திட்டத்தை நகல் எடுக்க தொடங்கி உள்ளனர், மற்ற நாடுகளிலும் தமிழகத்தின் மருத்துவ முறையை முன்னெடுக்க முனைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் அரசு பார்மஸி கல்லூரிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ள காரணத்தினால் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பார்மஸி கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு தான் வேலை தர வேண்டும் என மனப்போக்கு மாணவர்களிடையே உள்ளது, அது தவறில்லை. ஏராளமான தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது. அதனையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்போது படிக்கும் மருத்துவ மாணவர்களின் தகுதி, திறமையை கொண்டு படிப்பை முடித்த பின் அவர்களுக்கான காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும்.

அண்மையில் 946 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அனைவருக்கும் கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கே பணி ஆணைகள் தரப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அரசு பொறுப்பேற்றபிறகு 24,000 மருத்துவம் சார்ந்த பணிநியமனங்கள் முறையாக நடைபெற்றிருக்கிறது. மேலும் கலந்தாய்வு மூலம் 34,000-க்கும் மேற்பட்ட பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜன.5-ம் தேதி அன்று 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற இருக்கிறது.

தமிழக முதல்வர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மக்கள் மருந்தகம் தமிழகத்தில் 1000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். எனவே மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜென்ரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு தமிழக முதல்வரால் தமிழகத்தில் 1000 மக்கள் மருந்தகங்கள் கூட்டுறவுத்துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து இச்சேவை தொடங்கப்படவிருக்கிறது,” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்