சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிபூண்டி வழித்தடத்தில் தினமும் தாமதம்: பரிதவிக்கும் ரயில் பயணிகள் 

By ப.முரளிதரன்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்​பூண்டி வழித்​தடத்​தில் மின்சார ரயில்கள் நாள்​தோறும் தாமதமாக இயக்​கப்​படு​வதால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்​துக்கு உள்ளாகி வருகின்​றனர்.

சென்னை சென்ட்​ரலில் இருந்து அரக்​கோணம், திருத்​தணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், கும்​மிடிப்​பூண்டி, சூளூர்​பேட்டை ஆகிய புறநகர் பகுதி​களுக்கு தினசரி 320 மின்சார ரயில் சேவைகள் இயக்​கப்​படு​கின்றன. மேற்​கண்ட வழித்​தடத்​தில் மட்டும் நாள்​தோறும் 6 லட்சம் பேர் பயணிக்​கின்​றனர். இந்நிலை​யில், தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் காரணமாக 52 ரயில் சேவைகள் 6 மாதங்​களுக்கு முன்பு ரத்து செய்​யப்​பட்டன. அத்துடன், இயக்​கப்​படும் ரயில்​களும் குறித்த சமயத்​தில் அல்லாமல் தாமதமாக இயக்​கப்​படு​வ​தால், தினசரி பணிக்கு செல்​லும் ஊழியர்​கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரிதவிப்​புக்கு ஆளாகி வருகின்​றனர்.

இதுகுறித்து, ஆவடியை சேர்ந்த ரயில் பயணி சீனிவாசன் என்பவர் கூறிய​தாவது: புரசை​வாக்​கத்​தில் பணிபுரி​கிறேன். ஆவடி​யில் இருந்து சென்ட்ரல் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் அலுவலகம் செல்​வேன். ஆவடி​யில் இருந்து சென்னை சென்ட்​ரலுக்கு செல்ல 45 நிமிடங்கள் போதும். ஆனால், தற்போது ரயில்கள் தாமதமாக இயக்​கப்​படு​வ​தால் ஒருமணி நேரத்​துக்​கும் மேல் ஆகிறது. பராமரிப்பு என்ற பெயரில் ரயில் சேவை குறைக்​கப்​பட்​டதோடு, இயக்​கப்​படும் ரயில்​களும் தாமதமாக இயக்​கப்​படு​கின்றன. திரு​வள்​ளூரில் இருந்து சென்ட்​ரலுக்கு இயக்​கப்​படும் ரயில் காலை 10.25 மணிக்கு ஆவடிக்கு வர வேண்​டும். ஆனால், பெரும்​பாலான நாட்​களில் இந்த ரயில் குறைந்தது 15 நிமிடங்​களாவது தாமதமாக வருகிறது. இதேபோல​தான், பெரும்​பாலான ரயில்​களும் தாமதமாக இயக்​கப்​படு​கின்றன.

அத்துடன், இயக்​கப்​படும் ரயில்​களும் ஒரு குறிப்​பிட்ட இடைவெளி​யில் இயக்​கப்​படுவது கிடை​யாது. உதாரண​மாக, திருத்​தணியில் இருந்து சென்ட்​ரலுக்கு இயக்​கப்​படும் மெமூ ரயில் காலை 11.05 மணிக்கு ஆவடிக்கு வரும். இந்த ரயிலை​விட்​டால், சென்ட்​ரலுக்கு அடுத்த ரயில் 11.50-க்​குத் தான் வரும். அதாவது, சுமார் 45 நிமிடத்​துக்கு சென்ட்​ரலுக்கு ரயில் சேவை கிடை​யாது. இதனால் பயணிகள் தவிக்​கும் நிலை ஏற்படு​கிறது. அதே சமயம், 11.50 மணிக்கு பிறகு 10 நிமிட இடைவேளை​யில் நண்பகல் 12 மணிக்கு சென்ட்​ரலுக்கு ஒரு ரயில் இயக்​கப்​படு​கிறது. எனவே, இயக்​கப்​படும் ரயில்கள் 10 அல்லது 15 நிமிட சீரான இடைவெளி​யில் இயக்​கப்​பட்​டால் பயணி​களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்​கும்.

சீனிவாசன்

ரயில்​களின் தாமதம் குறித்து ரயில் நிலை​யங்​களில் முன்​கூட்​டியே அறிவிப்பு செய்​வ​தில்லை. ரயில் வருவதற்கு கடைசி நிமிடத்​தில் தான் அறிவிப்பு செய்​யப்​படு​கிறது. இதனால், பயணிகள் முன்​கூட்​டியே தங்களது பயண திட்​டத்தை மாற்ற முடியாத நிலை உள்ளது. தற்போது, பெரும்​பாலான ரயில் நிலை​யங்​களில் பணிபுரி​யும் நிலைய மேலா​ளர்கள் வடமாநிலத்தை சேர்ந்​தவர்​களாக உள்ளனர். அவர்​களுக்கு தமிழ் தெரி​யாத​தால், மொழி பிரச்​சினை காரணமாக அவர்​களிடம் ரயில்கள் தாமதம் குறித்து புகார் தெரிவிக்க முடிய​வில்லை.

மேலும், பயணிகள் செல்​லும் ரயிலுக்கு முன்னுரிமை வழங்​காமல், பணிமனைக்கு செல்​லும் ரயிலுக்கு முன்னுரிமை வழங்​கப்​படு​கிறது. திரு​வள்​ளூர், அரக்​கோணத்​துக்கு செல்​லும் ரயில்கள் இரவு நேரங்​களில் ஆவடி ரயில் நிலை​யத்​துக்கு வெளியே சிக்னல் கிடைக்​காமல் 10 முதல் 20 நிமிடங்கள் நிற்க வைக்​கப்​படு​கிறது. இதனால், பணி முடிந்து களைத்து போய் வீடு திரும்​புவோர் கடும் அவதிக்கு ஆளாகின்​றனர். மொத்​தத்​தில் பயணி​களின் வசதிக்காக ரயில்களை இயக்​காமல், அதிகாரிகள் தங்களின் வசதிக்காக ரயில்களை இயக்கு​கின்​றனரா என்றே எண்ணத் தோன்​றுகிறது. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

கொரட்​டூரை சேர்ந்த பெண் பயணி கீதா என்பவர் கூறிய​தாவது: தலைமை செயல​கத்​தில் பணிபுரி​கிறேன். கடற்கரை செல்​லும் ரயிலில் பயணிப்​பேன். தினமும் இந்த ரயில்கள் வியாசர்​பாடி​யில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை ஆங்காங்கே நிறுத்தி இயக்​கப்​படு​கிறது. இதனால், தினமும் தாமதமாக அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது.

கீதா

இதனால், சில நேரங்​களில் சென்ட்ரல் வரை ரயிலில் சென்​று​விட்டு பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் அலுவலகம் செல்​கிறேன். இதனால், பண விரயம், நேர விரயம் ஏற்படு​கிறது. அத்துடன், பீக் ஹவர் நேரங்​களில் 12 பெட்​டிக்​கு பதிலாக, 9 பெட்​டிகள் மற்றும் 8 பெட்​டிகள் கொண்ட ‘மெமூ’ ரயில்கள் இயக்​கப்​படு​வ​தால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டி உள்ளது. இதனால், என்னை போன்ற பெண் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்​கின்​றனர். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி​களிடம் கேட்​ட​போது, ரத்து செய்​யப்​பட்ட ரயில் சேவைகள் பராமரிப்பு பணி முடிந்​ததும் மீண்​டும் இயக்​கப்​படும். மின்சார ரயில்கள் தற்போது 95% சரியான நேரத்​தில் இயக்​கப்​படுகிறது. ஒருசில நேரங்​களில் தவிர்க்க முடியாத காரணத்​தால் தாமதமாக இயக்​கப்​படு​கிறது. ரயில்கள் தாமதமாக வந்தால் முன்​கூட்​டியே அறிவிப்பு செய்ய வேண்டுமென நிலைய மேலா​ளர்​களுக்கு அறிவுறுத்​தப்​படும். தற்போது இயக்​கப்​படும் மொத்த ர​யில்​களில் 4 ர​யில்​கள் மட்டுமே 9 பெட்​டிகளை ​கொண்டு இயக்​கப்​படு​கிறது. அவை இந்த ​மாதத்​துக்​குள் 12 பெட்​டிகளாக ​மாற்​றப்​பட்டு​விடும். வட​மாநிலத்​தை சேர்ந்த ர​யில் நிலைய மேலா​ளர்​களின் மொழி பிரச்​சினையை தீர்க்க ​விரை​வில் நட​வடிக்கை எடுக்​கப்​படும்​ என்றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்