அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் அலட்சியம் என குற்றச்சாட்டு

By டி.ஜி.ரகுபதி 


போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டுவதாக ஓய்வூதியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர், பணிமனை தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 1.50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச் சங்க பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜாராம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 95 ஆயிரம் பேர் உள்ளனர். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2019 அதிமுக ஆட்சியில் இது தொடர்பான அரசாணை (எண் 142) வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசாணையை ரத்து செய்துவிட்டு, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு 2022-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்குச் சென்றபோதும், அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அலுவலர் நலச் சங்கம் சார்பில் ரூ.70 லட்சம் செலவு செய்து வழக்கு தொடுத்து, அதில் வெற்றி பெற்றோம். ஆனால், அரசாணையை அமல்படுத்துவதற்காக அரசுத் தரப்பில் தொடர்ந்து அப்பீலுக்குச் சென்று, எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர்.

2015 முதல் இதுவரை பணப்பலன்களைப் பெறாமலேயே 15 ஆயிரம் ஓய்வூதியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசுதான் பொறுப்பாகும். எங்களுக்குத் தர வேண்டிய ரூ.3,028 கோடி நிலுவையில் உள்ளது. மாதந்தோறும் ரூ.170 கோடி கூடுதலாக செலவாகும். எனவே, அகவிலைப்படி உயர்வு தர முடியாது என தொடர்ந்து கூறுவது ஏற்புடையதல்ல.

மற்ற அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு எல்லா சலுகையும் வழங்கப்படும் சூழலில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்காதது நியாயமற்றது. பேருந்தில் மகளிர்க்கு இலவச பயணத்தை கொண்டு வந்துவிட்டு, அதை ஈடுகட்ட போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பலன்களை நிறுத்துகின்றனர். இதேபோல, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு உரிய பலன்களை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்