சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஜன.9-ம் தேதி தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: தமிழகத்தில் பிற பொதுத்துறை நிறுவனங்களை ஒப்பிடும்போது, சேவைத்துறையாக இயங்கும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் ஓய்வூதியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஓய்வு பெறும்போது பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு நிலுவையில் உள்ளது. இதை வழங்க உயர்நீதிமன்ற கிளை முதல் உச்சநீதிமன்றம் வரை உத்தரவிட்டபோதும், தொடர்ந்து மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.
15-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் சென்னை, பல்லவன் சாலையில் வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தர்ணா நடைபெறும். அரசு விரைந்து கோரிக்கைகளை பரீசிலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago