சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவது குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணிநிரந்தரத்திற்கு 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் காத்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினிஅறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல்திறன் என மொத்தம் 12 ஆயிரம் பேர் தற்காலிக அடிப்படையில் பணிபுரிகின்றனர்.
தற்போது வழங்கப்படும் ரூ. 12,500 தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். பணிநிரந்தரம் ஒன்றே வாழ்வாதாரம், பணிப்பாதுகாப்புக்கு வழி வகுக்கும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago