மேடவாக்கம்: பள்ளிக்கரணையில் நடந்த கோர விபத்தில் சென்டர் மீடியனில் பைக் மோதி 20 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ஒருவரின் தலை துண்டாகியது; மற்றொருவர் நெஞ்சில் அடிபட்டு உயிரிழந்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் விஷ்ணு(24). இவர் மேற்கு மாம்பலம், நாகலட்சுமி தெருவைவில் வசித்து வந்தார். இவரது நண்பர் பம்மலைச் சேர்ந்தவர் கோகுல்(24). இவர்கள் இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் பணியாற்றும் அஜேஷ் பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் ஆறாவது தெருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அஜேஷ் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு செல்கிறார். இதற்காக பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகரில் உள்ள அஜேஷின் அறையில் நேற்று இரவு விஷ்ணு கோகுல், கிஷோர் என எட்டு பேர் சேர்ந்து கெட் டு கெதர் பார்ட்டி நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் காலை 4 மணி அளவில் விஷ்னு மற்றும் கோகுல் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மது வாங்குவதற்காக பல்லாவரம்-துரைபாக்கம் 200 அடி ரேடியல் சாலை பள்ளிகரணையில் உள்ள தனியார் மது பாருக்கு சென்று பின்னர் வேளச்சேரி மெயின் சாலைவழியாக ராஜலட்சுமி நகர் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். பள்ளிகரணை சிவன்கோயில் அருகே வந்தபோது கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனில் மோதியது. இதில் இருவரும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். இதில் விஷ்ணுவிற்கு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
» ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் என்னென்ன?: தமிழக அரசு பட்டியல்
மேலும் கோகுல் சுமார் 20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நிலையில் அவரது தலை மின்கம்பத்தில் மோதியதில் தலை துண்டாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைபார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவர் பிரேதத்தையும் கைபற்றி பிரேத பரிசோனைக்காக குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago