தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தாமதத்தால் பணிகள் நிறுத்தம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு நிதி ஒதுக்கி​யும், நிலம் கையகப்​படுத்து​வ​தில் உள்ள தாமதத்​தால் பணிகள் பாதி​யில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ளன என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்​யும் ரயில்வே பட்ஜெட்​டில் தமிழகத்​துக்கு பாரபட்சம் காட்​டப்​படு​கிறது என மத்திய அரசு மீது குற்​றச்​சாட்டுகள் முன்​வைக்​கப்​படுகின்றன. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவை​யில் எழுத்துப்​பூர்வமாக அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் ரயில்வே உள்கட்​டமைப்புத் திட்​டங்கள் மற்றும் பாது​காப்புப் பணிகளுக்காக கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்​படி, கடந்த 3 ஆண்டு​களில் மட்டும் தமிழகத்​துக்கு ரூ.33,467 கோடி மதிப்​பிலான 22 ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அதில், 10 புதிய வழிதடம், 3 அகல ரயில் பாதை மாற்​றம், 9 இரட்டை ரயில் பாதை திட்டப் பணிகள் அடங்​கும். இதில், 872 கி.மீ நீளமுள்ள புதிய வழித்​தடம் அமைக்​கும் பணியில் 24 கி.மீ.க்கான பணிகளும், 748 கி.மீ. நீளமுள்ள அகல ரயில் பாதையாக மாற்றும் பணியில் 604 கி.மீ.க்கான பணிகளும், 967 கி.மீ இரட்டை ரயில் பாதை அமைக்​கும் பணியில் 37 கி.மீ.க்கான பணிகளும் என மொத்தம் ரூ.7,154 கோடி மதிப்​பீட்​டில் 665 கி.மீ.க்கான பணிகள் மட்டுமே முடிந்​துள்ளன. மீதமுள்ள பணிகள் பாதி​யில் நிறுத்​தப்​பட்​டுள்ளன.

தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு, பட்ஜெட்​டில் நிதி ஒதுக்குவது பல மடங்கு அதிகரித்த​போதும், தேவையான நிலத்தை கையகப்​படுத்த, மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுக்​காத​தால்​தான் பல ரயில்வே பணிகள் பாதி​யில் நிறுத்​தப்​பட்​டுள்ளன. தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு 3,389 ஹெக்​டேர் நிலம் தேவைப்​படும் பட்சத்​தில், வெறும் 866 ஹெக்​டேர் நிலம் (26 சதவீதம்) மட்டுமே இதுவரை கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, திண்​டிவனம் - திரு​வண்ணாமலை இடையே 71 கி.மீ.க்கு, புதிய பாதை அமைக்க 273 ஹெக்​டேர் நிலம் தேவை. ஆனால், 33 ஹெக்​டேர் மட்டுமே கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதேபோல், அத்திப்​பட்டு - புத்​தூர் இடையே புதிய ரயில் பாதைக்கு 189 ஹெக்​டேர், மொரப்​பூர் - தருமபுரிக்கு 93 ஹெக்​டேர், மன்னார்​குடி - பட்டுக்​ கோட்டைக்கு 152 ஹெக்​டேர், தஞ்சாவூர் - பட்டுக்​கோட்டை ​திட்​டத்​துக்கு 196 ஹெக்​டேர் நிலம் இதுவரை கையகப்​படுத்​தப்​பட​வில்லை. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்