அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை நீதி​மன்ற வளாகத்​தில் இளைஞர் படுகொலை செய்​யப்​பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து மாவட்ட நீதி​மன்​றங்​களுக்​கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாது​காப்பு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற நீதிப​திகள் உத்தர​விட்​டுள்​ளனர்.

நெல்லை நீதி​மன்ற வளாகத்​தில் வழக்கு விசா​ரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதி​மன்ற வாயி​லில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் வெட்​டிப்​படு​கொலை செய்​தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதி​மன்றநீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்​வந்து வழக்காக எடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தர​விட்​டிருந்​தனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்​டும் இதே அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்​பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் மற்றும் மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் சீலிட்ட அறிக்கையை தாக்கல் செய்​தனர்.

அப்போது நீதிப​தி​கள் கூறியதாவது: போலீ​ஸார் சிறப்பு உதவி ஆய்வாளரான உய்ய​காட்டான் என்பவர் துணிச்​சலாக கொலை​யாளி​களில் ஒருவரை வழக்​கறிஞர்​களின் துணை​யுடன் விரட்​டிச் சென்று பிடித்​துள்ளார். அவரை பாராட்டு​கிறோம். அவருக்கு உரிய வெகுமதி மற்றும் நற்சான்​றிதழை அரசு வழங்​கு​வதுடன் அவருடைய பணிப்​ப​திவேட்​டிலும் பதிவு செய்ய வேண்​டும். அதேநேரம் மற்ற போலீ​ஸாரும், அதிகாரி​களும் என்ன செய்து கொண்​டிருந்​தனர்?

இந்த கொலை சம்பவம் எங்கு நடந்​துள்ளது என்பது தான் கவலை கொள்ள வைக்கிறது. நீதி​மன்ற வளாகத்​துக்​குள்​ளேயே ஒருவரை விரட்டிகொலை செய்ய முடிகிறது என்றால் சாட்சிகள் எப்படி துணிச்​சலாக சாட்​சியம் அளிக்க முன்​வரு​வர். காவல்​துறை​யினர் பணி நேரத்​தி​லும்கூட செல்​போனில் தான் அதிகமாக மூழ்கி கிடக்​கின்​றனர். நாங்கள் நீதி​மன்​றத்​துக்கு வரும் வழியில் போக்கு​வரத்து போலீ​ஸார் என்ன செய்து கொண்​டிருக்​கின்றனர் என்பதை கண்கூட்டாக பார்க்​கிறோம்.

இந்த கொலை சம்பவம் நடந்த​போது பாது​காப்பு பணியில் இருந்து தவறிழைத்த போலீ​ஸார் மற்றும் அதிகாரிகள் மீது நெல்லை காவல் ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். நிரந்​தரமாக பாது​காப்பு ஏற்பாடுகளை செய்​யும் வரை இடைக்​காலமாக தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து ​மாவட்ட நீ​தி​மன்​றங்​களுக்​கும் தேவையான ஆ​யுதம் தாங்கிய ​போலீ​ஸாரை பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்த வேண்​டும்.

இவ்வாறு உத்​தர​விட்டு அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜன.7-ம் தே​திக்கு தள்ளி வைத்​துள்​ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்