“சிஎம் செல்லுக்கு மனுவே வரக்கூடாது!” - அதிகாரிகளுக்கு ‘ஆக் ஷன் கொக்கி’ போடும் உதயநிதி

By இரா.கார்த்திகேயன்

பொதுவாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினால் அதிகாரிகள் தங்கள் மீது எந்தக் குறையும் வராத அளவுக்கு அனைத்தையும் ‘செட் செய்து’ வைத்துவிடுவார்கள். இதன் மூலம் பிரச்சினையின் நிஜ நிலவரம் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஆனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் அப்படியான செட்டப்ஸீன்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஆய்வுக்​கூட்டம் நடத்தும் மாவட்​டங்​களுக்கு மூன்று நாட்கள் முன்ன​தாகவே அதிகாரிகள் குழு ஒன்று களத்தில் இறங்கி ரகசியமாக ஆய்வு நடத்து​கிறது. இவர்கள் தரும் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு ஆய்வுக் கூட்டத்தில் அமர்கிறார் உதயநிதி. இது தெரியாமல் அதிகாரிகள் யாராவது உண்மை நிலவரத்தை மறைத்து பதிலளித்​தால், தன்னிடம் உள்ள தரவுகளை எடுத்துப் போட்டு திகைக்க வைக்கிறார் உதயநிதி.

இப்படித்தான் கடந்த 18-ம் தேதி திருப்பூர் மாவட்ட ஆய்வுக்​கூட்டம் உதயநிதி தலைமையில் நடந்தது. பொங்கலூர் சிங்கனூர் பள்ளியில் காலை உணவை சமைத்து​வைத்து​விட்டு சமையலர் சொந்த வேலையாக வெளியே சென்றிருக்​கிறார். இதுகுறித்து துணை முதல்​வரின் ஸ்பெஷல் டீம் ரிப்போர்ட் கொடுத்​திருக்​கிறது.

ஆயுவுக் கூட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய உதயநிதி, “அந்த உணவின் பாதுகாப்​புக்கு யார் பொறுப்பு? குழந்தைகள் சாப்பாட்டு விஷயத்தில் இப்படிச் செய்ய​லாமா? இது தொடர்பாக சமையலருக்கு உரிய பயிற்சி தரவில்​லையா?” எனக் கேள்விகளால் துளைக்க, அதிகாரிகள் திணறிப் போனார்கள்.

அவிநாசி வட்டத்தில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது தொடர்பான மனுக்கள் அதிகமாக தள்ளுபடி ஆவது ஏன் என வருவாய்த்​துறை​யினருக்கு கேள்வி எழுப்​பினார் உதயநிதி. இதையெல்லாம் சற்றும் எதிர்​பார்க்காத அதிகாரிகள் மழுப்​பலாகவே பதில் சொல்ல, “இது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்லை?” என சிடுசிடுத்தார்.

மாவட்​டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் குற்றச்​சம்​பவங்கள் அதிகரித்​திருப்பது, பள்ளிக்கு குழந்தைகள் வருகை குறைந்​திருப்பது, குழந்தை திருமணங்கள் மற்றும் போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட சமாச்​சா​ரங்கள் தொடர்​பாகவும் புள்ளி​விவரங்களை வைத்துக் கொண்டு கேள்வி எழுப்​பியவர், அண்மையில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்​கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்​பாகவும் உதட்டைப் பிதுக்​கி​னார்.

உடுமலை ஆமந்தக்கடவு பகுதி மக்கள் குடி தண்ணீர் வசதி கேட்டு முதல்வர் தனிப்​பிரிவுக்கு அனுப்பிய மனுவை கையோடு எடுத்து வந்திருந்த உதயநிதி, “இவர்கள் மனு கொடுத்து 6 மாதங்களான பிறகும் ஏன் நடவடிக்கை எடுக்க​வில்லை?” என சம்பந்​தப்பட்ட பிடிஓ-வை கிடுக்​குப்பிடி போட்டார்.

அதற்கு அவர், “சரி செய்கிறேன் சார்” என மலுப்பவே, அப்போதே ‘முதல்வன்’ பட பாணியில் மனுதா​ரருக்கு போன் போட்டவர், மறுமுனையில் பேசிய மனுதாரர், “இன்னும் பிரச்சினை தீரவில்லை சார்...” என்று சொன்னதை லவுட் ஸ்பீக்​கரில் அனைவருக்கும் கேட்கும்படி ஒலிக்க விட்டார். இதேபோல், இன்னும் 4 பேருக்கு போன் போட்டு அவர்களையும் பேசவைத்து அதிகாரிகளை அசரவைத்தார்.

“மாவட்ட அளவில் வரும் புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத போதுதான் சிஎம் செல்லுக்கு புகார்கள் வந்து குவிகின்றன. இதனால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படு​கிறது. இனிமேல், சிஎம் செல்லுக்கு புகார்கள் வரக்கூ​டாது. அப்படி வராதபடிக்கு உங்களிடம் வரும் மனுக்​களுக்கு உரிய தீர்வை நீங்களே சொல்லி​விடுங்கள்” - இதுதான் திருப்பூர் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் அதிகாரி​களுக்கு உதயநிதி ​போட்டு​விட்டுச் சென்​றிருக்கும் கண்​டிப்பான உத்​தரவு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்