சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜன.27-க்கு ஒத்திவைப்பு

By கி.மகாராஜன் 


மதுரை: சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜன.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக பி. சி பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் பல முறை ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.தொடர்ந்து சவுங்கு சங்கரை தேனி போலீஸார் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமல செல்வன் முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் பிடியாணையை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்க மறுத்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார். இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என சவுக்குசங்கர் கோரிய வழக்கில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்ட பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்