மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அமைப்போம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

சேலம்: மக்கள் எதிர்​பார்க்​கும் கூட்​ட​ணியை அமைப்​போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

இந்திய ஜனநாயக கட்சி, அமமுக, பாமக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்​டோர் அதிமுக​வில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்​றது. இதில் பழனிசாமி பேசி​ய​தாவது: திமுகவை ஒழிக்க வேண்​டும் என்ப​தற்காக தொடங்​கப்​பட்ட கட்சி அதிமுக. இக்கட்​சி​யில் இணைவோருக்கு எப்போதும் உரிய மரியாதை தரப்​படும். அம்மா மினி கிளினிக் திட்​டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்​டங்களை திமுகஅரசு ரத்து செய்​து​விட்​டது.

திமுக தேர்தல் அறிக்கை​யில் 100 நாள் வேலை​வாய்ப்புத் திட்​டத்தை 120 நாட்​களாக உயர்த்து​வதாக அறிவித்​தனர். ஆனால் இதுவரை அதை செயல்​படுத்​தவில்லை. குடி மராமத்து திட்​டத்​தை​யும் நிறுத்​தி​விட்​டனர். அதிமுக ஆட்சி​யில் கொண்டு​வரப்​பட்ட திட்​டங்களை திமுக அரசு கிடப்​பில் போட்டு​விட்​டது.

தமிழகத்​தில் தினமும் பாலியல் வன்கொடுமை நடக்​கிறது. சட்டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​துள்ளது. இதுவரை கஞ்சா புழக்​கத்​தைக் கட்டுப்​படுத்​தவில்லை. சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்​தும் உயர்த்தி, மக்களுக்கு மிகுந்த சுமை​யைக் கொடுக்​கின்​றனர். கூட்​ட​ணியை நம்பித்​தான் திமுக தேர்​தலில் போட்​டி​யிடு​ கிறது. ஆனால், அதிமுக மக்களை நம்பியே தேர்தலை சந்திக்​கிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்​தலில் பொது​மக்கள் எதிர்​பார்க்​கும் கூட்​ட​ணியை அதிமுக அமைக்​கும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் பேசிய பழனிசாமி, “மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த சர்ச்சைக்கு முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார் ​விளக்​கம் ​அளித்துள்ளார். அது என்னுடைய கருத்​து​தான்” என்​றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்