எல்லை தாண்டி தொல்லையைக் கொடுக்கும் கேரளம்! - கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா தமிழகம்?

By அ.அருள்தாசன்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதி நீர்நிலைகளில் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை எதிர்க்​கட்​சிகள் கையெலெடுத்ததை அடுத்து திருநெல்​வேலி மாவட்ட நிர்​வாகம், மாசுக்​கட்டுப்​பாட்டு வாரி​யம், சுகா​தா​ரத் துறை​யினர் என அனைத்​துத் தரப்பும் சோம்​பல் முறித்து களத்​தில் இறங்​கி​யுள்​ளனர்.

கழி​வுகளை கொட்​டிய​வர்​கள் மீது உரிய நட​வடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்சி​யர் கா.ப. கார்த்தி​கேயனும் எச்​சரித்​துள்ளார். சு​மார் 25 ஆண்​டு​களுக்​கும் மேலாகவே கேரளத்​தின் கழி​வுகளை கொட்டும் குப்​பைத் தொட்​டியாக கன்னி​யாகுமரி, திருநெல்​வேலி, தென்​காசி மாவட்​டங்​கள் மாறி​விட்டன. இதே​போல் கோவை, ஈரோடு மாவட்​டங்​களி​லும் கேரள கழி​வுகளை அத்​து​மீறி கொட்டி வரு​கிறார்​கள். இதை நிறுத்த எத்தனை முறை தமிழக அரசு கடிதம் எழு​தி​னாலும் கேரளத்​தின் அத்​து​மீறல் நின்​ற​பாடில்லை.

திருநெல்​வேலி, தென்​காசி மாவட்ட கு​வாரி​களில் இருந்து தின​மும் ஏராளமான லாரி​களில் கனிம வளங்​கள் கேரளத்​துக்கு கொண்டு செல்​லப்​படு​கின்றன. அரிசி, காய்​கறிகள், பழங்​கள் உள்​ளிட்ட உணவுப் பொருட்​களும் வாக​னங்​களில் அனுப்​பப்​படு​கின்றன. இந்த வாக​னங்​கள் எல்​லாம் அங்​கிருந்து திரும்​பும் போது அவற்றில் தேவையற்ற கழி​வு​களை​யும் ஆபத்தை விளைவிக்​கும் மருத்​துவக் கழி​வு​களை​யும் மன​சாட்​சியே இல்​லாமல் ஏற்றி அனுப்பு​கிறார்​கள்.

காசுக்காக இவற்றை ஏற்றி வரும் தமிழகத்து வாகன ஓட்​டிகள் அவற்றை தமிழக எல்​லைக்​குள் இர​வோடு இர​வாகக் கொண்டு வந்து மக்​கள் நட​மாட்​ட​மில்லாத பகு​தி​களில் கொட்​டி​விட்டுப் போய்​விடு​கிறார்​கள். எல்​லையோர சோதனைச் சாவடி​யில் இருப்​பவர்களை மாமூலாக ‘கவனித்து’ விடு​வ​தால் அவர்​களும் இதைக் கண்​டு​ கொள்​வ​தில்லை என்​கிறார்​கள்.

இப்படி கழி​வு​களு​டன் வரும் வாக​னங்களை சிலசம​யம் பொது​மக்​கள் சிறைபிடிக்​கிறார்​கள். அப்​போது வாகன ஓட்​டிகள், கழி​வுகளை கொட்​டிய​வர்​கள் மீது வழக்​கும் பதிவு செய்​யப்​படு​கிறது. வாக​னங்​களுக்கு அப​ராத​மும் வி​திக்​கப்​படு​கிறது. ஆனாலும் பிரச்​சினைக்கு முடி​வில்லை.

தங்​கள் மாநிலத்​தில் இயற்கை வளங்களை பாது​காக்க நினைக்​கும் கேரளத்​தினர் தமிழகத்தை குப்பை கிடங்​காக்க துணிவதற்கு, இங்​குள்​ளவர்​களும் துணை​போவது​தான் வேதனை. இப்படி கழி​வு​களைக் கொட்டு​பவர்​கள் மீதும் சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் மீதும் தமிழக அரசு கடுமையான நட​வடிக்கைகளை எடுக்​காமல் விடு​வ​தால் இந்த அத்​து​ மீறல் வழி​வழியாக தொடர்​கிறது.

இது​குறித்​துப் பேசிய நெல்​லை​யைச் சேர்ந்த சமூக ஆர்​வலர் முத்​து​ராமன், “எல்​லை​யிலுள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையை கடுமை​யாக்கி, நேர்​மையான அதிகாரிகளை பணி​யமர்த்தி திறம்பட செயல்​பட்​டால் இந்த அத்​து​மீறலை தடுத்து​விடலாம். கழி​வு​களு​டன் வரும் வாக​னங்​கள் பிடிபட்​டால் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது சுற்றுச்​சூழல் பாது​காப்புச் சட்​டத்​தின் கீழ் கடும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்​தச் சட்​டத்​தில் உள்ள 5 ஆண்டு சிறை, அல்லது ரூ.1 லட்​சம் அப​ராதம் என்ற வி​தியை மேலும் கடுமை​யாக்க வேண்​டும். காவல்​துறை நட​வடிக்கை எடுக்​கும் என்​றில்​லாமல் மாசுக்​கட்டுப்​பாட்டு வாரிய அதிகாரிகளே நேரடியாக களத்​தில் இறங்கி கழி​வுகளை கொட்டு​வோர் மீது கடும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும். கழி​வு​களைக் கொட்டும் வாக​னங்களை பறி​முதல் செய்​வதுடன், சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்களை நிரந்​தரமாக தடை செய்​ய​வும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரளத்தின் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றுவதற்கான செலவை கேரள அரசு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ள தீர்ப்பாயம், இது தொடர்பாக கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயரதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தென்​மாவட்ட வளங்​களால் வாழ்வு பெறும் கேரளம் அதற்கு கைம்​மாறாக ஆபத்தான குப்​பைகளை அனுப்பும் கொடுமையை தமிழக அரசு இனி​யும் வேடிக்கை பார்க்​காமல்​ இரும்​புக்​ கரம்​ கொண்​டு தடு​க்​கட்​டும்​!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்