மாநகராட்சி இடத்தை மனைவி பெயரில் வாங்கினாரா? - தஞ்சை திமுக மேயருக்கு எதிராக தடதடக்கும் சர்ச்சை!

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சட்டவிரோதமாக மனைப் பிரிவுகளாக மாற்றியதாகவும் அதில் ஒரு மனையை மேயர் தனது மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதாகவும் சர்ச்சை வெடித்து விவகாரம் கோர்ட்டுக்கு வந்திருக்கிறது. தஞ்​சாவூரில் கடந்த 1973-ல் அருளானந்​தம்​மாள் நகர் உருவாக்​கப்​பட்​டது. இந்த மனைப்​பிரிவு உருவான போது நகராட்சி (அப்​போது நகராட்சி) பொதுப் பயன்​பாட்டுக்காக சுமார் 45 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், கந்தர்​வகோட்​டையைச் சேர்ந்த பொன்​னாமணி என்பவர் அந்த இடம் தனக்​குச் சொந்தம் எனக் கூறி அதனை மனைப்​பிரிவு​களாகப் பிரித்து விற்க முயன்​றார். ஆனால், நகராட்சி ஆவணங்​களில் அது நகராட்சி இடம் என இருந்​த​தால் மனைப்​பிரிவுக்கு அனுமதி பெறு​வ​தில் சிக்கல் ஏற்பட்​டது. இதையடுத்து, பொன்​னாமணி பழைய கிரைய பத்திரத்தை வைத்து சிலரின் துணை​யோடு அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றி​யுள்​ளார். இதைவைத்து கடந்த ஆண்டு இந்த மனைப்​பிரிவுக்கு அனுமதி கொடுத்​திருக்​கிறது மாநக​ராட்சி.

இதுவரை எந்தச் சர்ச்​சை​யும் எழவில்லை. ஆனால், இந்த மனைப் பிரி​வில் சுமார் 2,000 சதுரடி மனையை திமுக மேயர் சண்.​ராம​நாதன் தனது மனைவி சங்கீதா பெயரில் வாங்​கி​யுள்​ளார். இதற்​குப் பிறகு​தான் சந்தேகங்​களைக் கிளப்ப ஆரம்​பித்​திருக்​கிறார்​கள். மாநக​ராட்சிக்கு சொந்​தமான இடம் தனியார் கைக்கு போனது எப்படி... அதில் ஒரு பகுதி மேயரின் மனைவி பெயருக்கு பத்திரப் பதிவானது எப்படி? என்றெல்​லாம் கேள்விகள் கிளம்​பின.

மாமன்றக் கூட்​டத்​தில் திமுக உறுப்​பினர்களே இதுகுறித்து கேள்விகளை எழுப்​பினர். இதற்கு பதிலளித்த மாநக​ராட்சி ஆணையரோ, “நான் இந்த ஊருக்​குப் புதுசு, ஆவணங்​களைப் பார்த்து​விட்டுக் கூறுகிறேன்” என்று முதலில் சொன்​னார். பிறகு என்ன நடந்ததோ தெரிய​வில்லை, “இது தொடர்பான வழக்கு நீதி​மன்​றத்​தில் உள்ள​தால் மாமன்​றத்​தில் விவா​திக்​கக்​கூ​டாது” என விலகிக்கொண்டார். திமுக உறுப்​பினர்கள் இந்தப் பிரச்​சினையை கட்சி தலைமை வரைக்​கும் கொண்டு சென்​றிருப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது.

அருளானந்​தம்​மாள் நகரில் வசிக்​கும் பரந்​தாமன் என்பவர் தான் இதுகுறித்து உயர் நீதி​மன்றக் கிளை​யில் பொதுநல வழக்கு தாக்கல் செய்​துள்ளார். அவர் நம்மிடம் கூறுகை​யில், “இந்த நகர் உருவாக்​கப்​பட்ட போது நகராட்​சிக்கு தானமாக இந்த இடம் வழங்​கப்​பட்டு, நகராட்சி பள்ளிக்காக பதிவு செய்​யப்​பட்​டது.

ஆனால், சிலர் இதில் முறை​கேடாக மனைப்​பிரிவு ஏற்படுத்தி விற்பனை செய்​துள்ளனர். அதற்காக நகராட்சி ஆவணங்​களில் திருத்தம் செய்​துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடம் தனியாருக்கு தாரை வார்க்​கப்​பட்டது எப்படி என்று தான் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்ளேன்” என்றார்.

மேயர் சண்.​ராம​நாதனோ, “இது தொடர்பான வழக்கு நீதி​மன்​றத்​தில் இருப்​ப​தால், பேசுவதும், கருத்​துக் கூறு​வதும் சரியாக இருக்​காது. இருந்​தா​லும் அநீதி வீழும், நீதி வெல்​லும். எங்களுக்கு நியாயம் கிடைக்​கும்” என்றார். இந்த வழக்​கில், மாநக​ராட்சி மேயர் சண்.​ராம​நாதனின் மனைவி சங்​கீதா, ​மாவட்ட வரு​வாய் அலு​வலர், பொன்​னாமணி ஆகியோர் நேரில் ஆஜ​ராகி ​விளக்​கமளிக்க நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மேயர் சொல்வது ​போல் நீ​தியே வென்று நிஜத்தை மக்​களுக்​குச் சொல்​லட்​டும்​!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்