நாகப்பட்டினம்: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ரூ.16 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கவும், கடலில் அதிக மழை பெய்யவும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகுகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் கடந்த 11-ம் தேதி தடை விதித்தனர்.
இதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லார், சாமந்தான்பேட்டை, செருதூர், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வேதாரண்யம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
ஏற்கெனவே ஃபெஞ்சல் புயல் காரணமாக 14 நாட்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்கள், கடந்த 2-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 9 நாட்களாக கடலுக்கு சென்று வந்த நிலையில் மீண்டும் மீன்வளத் துறையினர் கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளதால், மீனவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் தினமும் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், 8 நாட்களாக ரூ.16 கோடி வர்த்தகம் பாதித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்வரத்து இல்லாத காரணத்தால் வெளிமாநில வியாபாரிகளால் கொண்டுவரப்படும் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago