சென்னை: கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரிய கருப்பன், "உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில், பழையன கழித்தல் புதியன புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் போகிப்பண்டிகையில் தொடங்கி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு தமிழ்மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அத்தகைய பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ முதல்வரால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதல்வர் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் ”கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை நடைபெறவுள்ளது.
இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இனிப்பு பொங்கல் தொகுப்பு, பச்சரிசி (BPT 43) - 500கிராம், பாகுவெல்லம் - 500கிராம், ஏலக்காய் - 5கிராம், முந்திரி - 50கிராம், ஆவின் நெய் - 50கிராம், பாசிபருப்பு - 100கிராம், உலர் திராட்சை -50கிராம் என 7 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, சிறிய பையுடன் ரூ.199/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
சிறப்பு பொங்கல் தொகுப்பு, மஞ்சள் தூள்-50கிராம், சர்க்கரை-500கிராம், துவரம் பருப்பு-250கிராம், கடலைப் பருப்பு-100கிராம், பாசிப் பருப்பு-100கிராம், உளுத்தம் பருப்பு-250கிராம், கூட்டுறவு உப்பு-1கிலோ, நீட்டு மிளகாய்-250கிராம், தனியா-250கிராம், புளி-250கிராம், பொட்டுக்கடலை-200கிராம், மிளகாய் தூள்-50கிராம், செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர், கடுகு-100கிராம், சீரகம்-50கிராம், மிளகு-25கிராம், வெந்தயம்-100கிராம், சோம்பு-50கிராம், பெருங்காயம்-25கிராம் என 19 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, மளிகை பையுடன் ரூ.499/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், பெரும் பொங்கல் தொகுப்பு, மஞ்சள் தூள்-50கிராம், சர்க்கரை-500கிராம், கூட்டுறவு உப்பு-1கிலோ, துவரம் பருப்பு-250கிராம், உளுத்தம் பருப்பு-250கிராம், கடலைப் பருப்பு-200கிராம், பச்சைப் பட்டாணி-100கிராம், பாசிப் பருப்பு (சிறுபருப்பு) -250கிராம், வெள்ளை சுண்டல்-200கிராம், வேர்க்கடலை-200கிராம், பொட்டுக்கடலை-200கிராம், வரமிளகாய்-250கிராம், புளி-200கிராம், தனியா-250கிராம், கடுகு-100கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம்-100கிராம், சோம்பு-50கிராம், ஏலக்காய்-5கிராம், செக்கு கடலை எண்ணெய்-1/2லிட்டர், வரகு-500கிராம், சாமை-500கிராம், திணை-500கிராம், ரவை-500கிராம், அவல்-250கிராம், ராகிமாவு-500கிராம், கோதுமை மாவு -500கிராம், ஜவ்வரிசி-200கிராம், வறுத்த சேமியா-170கிராம், மல்லி தூள்-50கிராம், சாம்பார் தூள்-50கிராம், மிளகாய் தூள்-50கிராம், பெருங்காயத் தூள்-25கிராம் என 34 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, பெரிய மளிகை தொகுப்புடன் ரூ.999/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பெரும் பொங்கல் தொகுப்புடன் மட்டும் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.
இந்த தொகுப்புகள் அனைத்தும் வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் ”கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக பொங்கல் பண்டியைகை கொண்டாடி மகிழ கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago