கேரளாவில் இருந்து கொண்டு​ வரப்பட்டு நெல்லை அருகே கொட்டப்​பட்ட மருத்துவ கழிவுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

திருநெல்​வேலி/ நாகர்​கோ​வில்: கேரள மாநிலத்​தில் இருந்து அபாயகரமான மருத்​துவக் கழிவுகளை வாகனத்​தில் கொண்டு வந்து நெல்லை அருகே​யுள்ள நீர்​நிலைகளில் கொட்​டியது மக்களிடையே அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

திரு​வனந்​த​புரத்​தில் உள்ள மண்டல புற்று நோய் மையத்​திலிருந்து வாகனத்​தில் கொண்டு​வரப்​பட்ட அபாயகரமான மருத்​துவக் கழிவு​கள், நெல்லை மாவட்டம் நடுக்​கல்​லூர், கோடகநல்​லூர் பகுதி​களில் உள்ள நீர் நிலைகளில் கொட்​டப்​பட்​டுள்ளன.

மேலும், கழிவுகள் அடங்கிய மூட்​டைகளில், புற்று​நோய் மையத்​தில் அனும​திக்​கப்​பட்ட நோயாளி​களின் விவரங்கள் அடங்கிய படிவங்​களும் இருந்தன. இது தொடர்பான காட்​சிகள் சமூக வலைதளங்​களில் பரவி அதிர்ச்​சியை ஏற்படுத்​தின.

3 பிரிவு​களில் வழக்கு: மருத்துவக் கழிவுகளை கொட்டி நீர்​நிலைகள் மற்றும் வயல்​வெளிகளை மாசுபடுத்தி உள்ளதாக சுத்​தமல்லி போலீ​ஸில், பழவூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்​துவக் கழிவுகள் கொட்​டப்​பட்​டுள்ள தனியார் இடத்​தின் மேற்​பார்​வை​யாளர் புகார் செய்​தனர். இதையடுத்து, போலீ​ஸார் 3 பிரிவு​களில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்​கொண்டு வருகின்​றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் கா.ப.​கார்த்தி​கேயன் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “கோடகநல்​லூர் பகுதி​யில் மருத்​துவக் கழிவுகள் கொட்​டப்​பட்​டுள்ளது தொடர்​பாக, சுற்றுச்​சூழல் பாது​காப்பு சட்டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்டு, விசாரணை நடத்​தப்​பட்டு வருகிறது. தமிழ்​நாடு மாசு கட்டுப்​பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்​சித் துறை மூலம் மருத்​துவக் கழிவுகளை ஆய்வுக்கு உட்படுத்​திட​வும், அவற்றை தகுந்த முறையில் அகற்​ற​வும்
நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது. மருத்​துவக் கழிவுகளை பொது இடங்​களில் கொட்​டக்​கூடாது என்று அறிவிப்பு வெளி​யிடப்​பட்ட நிலை​யில், இது போன்ற செயலில் ஈடுபட்​ட​வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்” என்று தெரி​வித்​துள்ளார்.

கன்னி​யாகுமரி​யிலும்... குமரி - கேரள எல்லையான நெட்டா சோதனைச் சாவடி​யில் நேற்று போலீ​ஸார் வாகன சோதனை​யில் ஈடுபட்​டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிடெம்​போவை நிறுத்தி சோதனையிட்​ட​தில், அதில் உணவுக் கழிவுகள் இருப்பது தெரிய​வந்​தது. இதையடுத்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீ​ஸார், ஓட்டுநர் தக்கலை சுதிஷ் (24), டெம்போ உரிமை​யாளர் அஜித் (27) ஆகியோரை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடு​வித்​தனர்.

அண்ணாமலை கண்டனம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்​தில், “கேரளா​வின் பயோமெடிக்​கல், பிளாஸ்​டிக், இறைச்​சிக் கழிவு​களின் குப்​பைக் கிடங்காக தென் மாவட்​டங்கள் மாற்​றப்​பட்​டிருக்​கின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்​தும், எந்த நடவடிக்கை​யும் எடுக்​கப்​பட​வில்லை. வரும் ஜனவரி முதல் வாரத்​தில் மக்களைத் திரட்டி, உயிரியல் மருத்​துவக் கழிவுகள் மற்றும் குப்​பையை லாரி​களில் ஏற்றிச் சென்று, கேரளா​வில் கொண்டு கொட்டு​வோம். முதல் லாரி​யில் நானும் செல்​வேன்” என்று தெரி​வித்​துள்ளார்.

இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடி​வி.​தினகரன் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “சுற்றுச்​சூழலுக்​கும், சுகா​தா​ரத்​துக்​கும் கேடு விளைவிக்​கும் வகையில் மருத்​துவக் கழிவுகளை தமிழகத்​தில் கொட்டும் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரி​வித்​துக் ​கொள்​கிறோம். இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​வோர் மீது கடும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்