தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தை டிச.30-ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி​ வைக்கிறார்

By செய்திப்பிரிவு

தூத்​துக்​குடி: அரசு நிதி​யுதவி பெறும் பள்ளி​களில் தமிழ்​வழிக் கல்வி பயின்று, உயர்​கல்வி பயிலும் மாணவி​களுக்​கும் புது​மைப்​பெண் திட்டத்​தின் மூலம் உதவித்​தொகை வழங்​கும் திட்​டத்தை முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வரும் 30-ம் தேதி தூத்​துக்​குடி​யில் தொடங்கி​வைக்​கிறார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்​பில், அரசுப் பள்ளி​களில் படித்து உயர்​கல்வி பயிலும் அனைத்து மாணவி​களுக்​கும் புது​மைப்​பெண் திட்​டத்​தில் மாதந்​தோறும் ரூ.1,000 வழங்​கப்​பட்டு வருகிறது.

இந்நிலை​யில், அரசு உதவி​பெறும் பள்ளி மாணவி​களுக்​கும் புது​மைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்​யப்​பட்​டுள்​ளது. தூத்​துக்​குடி​யில் வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்​டா​லின் இந்த திட்​டத்தை தொடங்கி​வைக்​கிறார்.

இது தொடர்பாக வங்கி​யாளர்​கள், அரசு அலுவலர்​கள், கல்லூரிதொடர்பு அலுவலர்​களு​டனான ஆலோசனைக் கூட்டம் தூத்​துக்​குடி ஆட்சியர் அலுவல​கத்​தில் நேற்று நடைபெற்​றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீ​தாஜீவன் தலைமை வகித்​தார். துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியர் க.இளம்​பகவத் முன்னிலை வகித்​தனர்.

கூட்​டத்​தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்​போது, “2024- 2025-ம் கல்வி​யாண்டு முதல் அரசு உதவி​பெறும் பள்ளி​களில் தமிழ்​வழிக் கல்வி பயின்று, உயர் கல்வி​யில் முதலா​மாண்டு, இரண்​டா​மாண்டு மற்றும் இறுதி​யாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்​கும் மாதந்​தோறும் ரூ.1,000 வழங்​கும் வகையில் இந்த திட்டம் விரிவுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தூத்​துக்​குடி​யில் வரும் 30-ம் தேதி நடைபெறும் அரசு விழா​வில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் இந்த திட்​டத்தை தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்