“திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும்” - தினகரன் அழைப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 10 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல், நடைமுறைக்கு எப்படி வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும்போது தான் தெரியவரும்.

மத்திய அரசு அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அது ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவுக்குள் எதிர்ப்புகள் வந்துள்ளது. அவருடைய செயல்பட்டால் 2026-க்குப் பிறகு அதிமுக இருக்குமா என்ற கேள்வி உள்ளது. 2026-ல் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கையாக கூறுவது போல தெரியவில்லை. மூடநம்பிக்கையுடன் பேசுவது போல் தெரிகிறது. அவரது செயல்பாடு 2026-ம் ஆண்டு தேர்தல் பிற கட்சிகளுக்கு தான் பலனாக அமையும்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்