சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 6-வது கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டுக்கான முதல் கூட்ம் மற்றும் 16 -வது சட்டப்பேரவைக்கான 6-வது கூட்டத் தொடர் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
தொடர்ந்து, பிப்.19-ம் தேதி தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இரு பட்ஜெட்கள் மீதும் 22-ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் மொத்தமாக 7 நாட்கள் நடத்தப்பட்டது.
அதன்பின், துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக 2-வது கூட்டம் , கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 9 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகள் படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், கடந்த டிச.9 மற்றும் 10-ம் தேதிகளில் 6-வது கூட்டத்தொடரின் 3 வது கூட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக பேரவை செயலர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago