அமுதா, அபூர்வா உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

By கி.கணேஷ்

சென்னை: அமுதா, அபூர்வா, காகர்லா உஷா உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இது குறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 1994ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளான, வருவாய்த் துறை செயலராக உள்ள பி.அமுதா, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக உள்ள அதுல் ஆனந்த், மத்திய அரசுப்பணியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை கூடுதல் செயலராக உள்ள சுதீப் ஜெயின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக உள்ள காகர்லா உஷா, வேளாண் துறை செயலராக உள்ள அபூர்வா ஆகியோர், செயலர் நிலையில் இருந்து தலைமைச்செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் கூடுதல் தலைமைச் செயலர்களாகியுள்ளனர்.

இதையடுத்து, வருவாய்த் துறை செயலர், குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர், வேளாண் துறை செயலர் பதவிகள் கூடுதல் தலைமைச்செயலர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்