மின் பயன்பாடு கணக்கீட்டில் தாமதம்: அதிக கட்டணத்தால் தமிழக மக்கள் அவதி!

By பெ.ஜேம்ஸ் குமார்

தமிழகத்​தில் 2 மாதங்​களுக்கு ஒரு முறை மின்​கட்​டணம் கணக்​கெடுக்​கப்படு​கிறது. வீடு​களுக்கான மின்​சாரம் 100 யூனிட் வரை இலவசமாக வழங்​கப்​படு​கிறது. 101 யூனிட் முதல் 500 யூனிட் வரை மானியவிலை​யில் மின்​சாரம் வழங்​கப்​படு​கிறது. அதற்கு மேல் பயன்​படுத்தினால் முழு கட்ட​ணத்தை செலுத்த வேண்​டும். 2 மாதங்​களுக்கு ஒரு முறை மின் பயன்​பாடு கணக்கு எடுக்​கப்​படு​கிறது. கணக்கு எடுத்த 20 தினங்​களுக்​குள் கட்ட​ணத்தை செலுத்த வேண்​டும், இல்லை​யேல் மின் இணைப்பு துண்​டிக்​கப்​படும். பின்னர் அபராதத்​துடன் கட்ட​ணத்தை செலுத்​தி​யதும் மின் இணைப்பு வழங்​கப்​படும்.

மின் வாரி​யம், வீடு​களில், மின் பயன்​பாட்டை பொறுத்து, 2 ஆண்டு​களுக்கு ஒரு முறை கூடுதல் வைப்பு தொகை வசூலிக்​கிறது. இதன்படி அதிக மின் பயன்​பாடு உள்ள வீடு​களில் தற்போது வைப்பு தொகை வசூலிக்​கப்​பட்டு வருகிறது. இந்நிலை​யில் மின் கணக்​கீட்டு ஊழியர்​கள், 2 மாதங்​களுக்கு மேல் அதாவது 60 நாட்களை கடந்த பிறகு மின் பயன்​பாட்டை கணக்​கீடு செய்து மின் கட்ட​ணத்தை நிர்ணயம் செய்​வதாக புகார் எழுந்​துள்ளது.

இதுகுறித்து குரோம்​பேட்டையை சேர்ந்த மருதன் கூறிய​தாவது: மின் கணக்​கீட்டு ஊழியர்கள் 60 நாட்​களுக்​குள் வந்து கணக்​கெடுக்​காமல் பல நாட்கள் கழித்து தாமதமாக வருகின்​றனர். இதனால், 2 மாதங்​களுக்கு ஒருமுறை செலுத்​தப்​படும் மின் கட்டணம் பல மடங்கு அதிகரிக்​கிறது. 60 நாட்​களுக்​குள் மின் பயன்​பாடு கணக்​கெடுக்​காமல் 70 நாட்​களில் கணக்​கெடுக்​கும்​போது மின் பயன்​பாடும் அதிகரிக்​கிறது.

இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படு​கிறது. இதனால், 2 மாதங்​களுக்கு ஒருமுறை மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடு​கிறது. குரோம்​பேட்டை மின் வாரிய உதவி பொறி​யாளர் அலுவல​கத்​துக்கு அதிகாரி இல்லை. பம்மல் செயற் பொறி​யாளர் கூடு​தலாக கவனித்து வருகிறார். அவரை சந்திக்​க​வும் முடிய​வில்லை. எனவே 60 நாட்​களுக்கு ஒருமுறை தவறாமல் மின் பயன்​பாட்டை கணக்​கெடுக்​கும் வகையில் மின்வாரியதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு அவர் கூறினார்.

மின்​வாரிய அதிகாரிகள் கூறுகை​யில், குரோம்​பேட்டை அலுவல​கத்​தில் 2 பேர் உள்ளனர். ஒருவர் சரியாக பணி செய்​யாத​தால் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டுள்​ளார். ஒருவர் மட்டுமே தற்போது பணியில் உள்ளார். ஒப்பந்த அடிப்​படை​யில் சிலரை நியமித்து பணிகளை கவனித்து வருகிறோம்.

மின் கணக்​கீட்​டாளர்கள் பற்றாக்​குறையாக உள்ளனர். மேலும் வேறு பல பணிகள் உள்ள​தால் 60 நாட்​களுக்கு ஒருமுறை கணக்​கீடு செய்​வ​தில் சற்று ​தாமதம் ஏற்​படு​கிறது. ​தாமதம் ஏற்​படும் இடங்​களில் 2 ​மாதங்​களுக்கான சராசரி எடுத்து, அ​தில் ​கால​தாமதமான நாட்களை கழித்தே மின்​கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​படு​கிறது என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்