ஓஎம்ஆர் - இசிஆர் இணைப்பு திட்டம் தாமதம்: பணம் ஒதுக்கியும் நிலம் எடுக்கவில்லை!

By கி.கணேஷ்

சென்னையை புதுச்​சேரி​யுடன் இணைக்​கும் இரண்டு பிரதான சாலைகள் பழைய மகாபலிபுரம் சாலை (ராஜீவ் காந்தி சாலை) மற்றும் கிழக்கு கடற்​கரைச் சாலை. இதில் ராஜிவ்​காந்தி சாலை தற்போது ஐடி நிறு​வனங்கள் மற்றும் குடி​யிருப்பு​களால் நிறைந்துள்ளது. கிழக்கு கடற்​கரை சாலை​யிலும் ஐடி நிறு​வனங்​கள், மிகப்​பெரிய குடி​யிருப்புகள் மற்றும் ரிசார்ட்​கள், பொழுது​போக்கு அம்சங்​களுடன் கூடிய பூங்​காக்​கள், திரையரங்​கு​கள், மிகப்​பெரிய மால்கள் என மக்கள் அதிகம் விரும்​பும் பகுதியாகமாறியுள்ளது.

எனவே, சென்னை மற்றும் புறநகரில் இருந்து தினசரி ஆயிரக்​கணக்​கானனோர் வந்து செல்​லும் சாலையாக மாறி​யுள்​ளது. ஒரே நேர்​கோட்​டில் பயணிக்​கும் இந்த இரு சாலைகளுக்​கும் இடையில் பக்கிங்​காம் கால்​வாய் செல்​கிறது. கால்​வா​யின் இருபுற​மும், ஒஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளை ஒட்டி பெரும் குடி​யிருப்புகள் நிறைந்​துள்ளன. இருப்​பினும், இரு சாலைகளுக்​கும் இடையில் இணைப்பு சாலை என்பது மிகக் குறைவே.

இருசாலைகளும் சென்னை​யில் திரு​வான்​மியூரில் இருந்தே தொடங்​கு​கின்றன. இடையில் பெருங்​குடி, சோழிங்​கநல்​லூர், கேளம்​பாக்கம் ஆகிய இடங்​களில் இணைப்பு சாலைகள் உள்ளன.a ஆனால், இவற்றுக்​கிடையிலான தூரம் பல கி.மீட்​டர்​கள். இதில் பெருங்​குடி பகுதி​யில் உள்ள இரு சிறிய சாலைகளில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடி​யும். பக்கிங்​காம் கால்​வாயை கடக்க அமைக்​கப்​பட்​டுள்ள பாலமும் வாகன போக்கு​வரத்தை தாங்​கக்​கூடியதாக இல்லை.

இதற்​கிடை​யில், சென்னை குரோம்​பேட்​டை​யில் இருந்து ஈச்சங்​காடு வழியாக துரைப்​பாக்​கத்தை அடையும், ரேடியல் சாலையை கிழக்கு கடற்கரை சாலை​யுடன் இணைக்​கும் விதமாக துரைப்​பாக்கம் சந்திப்​பில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு பக்கிங்​காம் கால்​வாய் வழியாக புதிய இணைப்பு சாலை அமைக்க திட்​ட​மிடப்​பட்​டது.

தற்போது, துரைப்​பாக்கம் ஓஎம்ஆர் சாலை​யில் இருந்து பக்கிங்​காம் கால்​வாய் வரை சாலை போடப்​பட்டு, அந்த சாலையை ‘வாக்​கிங்’ செல்​வோர் பயன்​படுத்தி வருகின்​றனர். ஆனால், அதற்கு பின் பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைப்​பட்​டுள்​ளது.

இந்நிலை​யில், இத்திட்டம் குறித்து, சென்னை மடிப்​பாக்​கத்​தை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்​தப்பன் தகவல் அறியும் உரிமை சட்டத்​தின் மூலம் நெடுஞ்​சாலைத்​துறை இடமிருந்து தகவல் பெற்றுள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த சாலை பணிகள் 2 கட்டங்​களாக திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

முதல் கட்டத்​தில் துரைப்​பாக்கம் சந்திப்​பில் இருந்து பக்கிங்​காம் கால்​வாய் வரை இணைப்பு சாலை மற்றும் பாலம் கட்டுமான பணி. அடுத்த கட்டம் கிழக்கு கடற்கரை சாலை​யில் நீலாங்கரை பகுதி​யுடன் இணைக்​கும் இணைப்பு சாலை. இப்பணிக்காக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை போடப்​பட்டு, ரூ.204.20 கோடி நிதி ஒக்கப்​பட்​டுள்​ளளது.

முதல் கட்டத்​தில், தற்போது துரைப்​பாக்​கத்​தில் இருந்து பக்கிங்​காம் கால்​வாய் வரையிலான இணைப்பு சாலை பணி முடிந்​துள்ளது. பக்கிங்​காம் கால்​வா​யில் பாலம் கட்டப்பட வேண்​டி​யுள்​ளது. 2-ம் கட்டத்​தில், இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்​படுத்​தப்பட வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது. அதாவது, 2-ம் கட்ட ​பணிக்கு தேவைப்​படும் 11,085 சதுர மீட்டர் நிலத்தை கையகப்​படுத்த ரூ.142 கோடி நிதி ஒதுக்​கப்​பட்டு​விட்​டது.

தற்போது நில எடுப்பு பணி, கிண்​டி​யில் உள்ள ஒருங்​கிணைந்த தலைமை பொறி​யாளர் அலுவல​கத்​தில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமை​யில் நடைபெற்று வருவ​தால், பணிகள் முடிந்​ததும் சாலை பணிகள் தொடங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. நிதி ஒதுக்​கப்​பட்டு பல ஆண்டு​களாகி​யுள்ள நிலை​யில், விரை​வில் நில எடுப்பு பணிகளை முடிக்க வேண்​டும் என்று பொது​மக்கள் எதிர்​பார்க்​கின்​றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்