சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்பிரதேசம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் நீதிபதி எந்த முறையில் கலந்து கொண்டாரா என்ற வினா எழுகிறது. சட்டவிதிகளை மீறி இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விஷம் கக்கும் வெறுப்பு பேச்சும் பேசியுள்ளார்.
நீதித் துறையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பற்ற பண்பை தகர்த்து, அநாகரிகமாக செயல்பட்ட, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அவரை நீதிபதி பொறுப்பில் இருந்து நீக்கவும், நாடாளுமன்ற விதிமுறைகளை பின்பற்றி எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் ‘இம்பீச்மெண்ட்’ அறிவிப்பு கொடுத்துள்ளனர். இந்த அறிவிப்பில் அஇஅதிமுக கையெழுத்து போடவில்லை என்பது அதன் சந்தர்ப்பவாத செயலை வெளிப்படுத்துகிறது.
பாஜகவோடு கூட்டணி இல்லை எனில், நீதிபதியின் வகுப்புவாத வெறுப்பேற்றும், மதவெறி வன்ம பேச்சை கண்டித்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் 55 பேர் கையெழுத்திட்டு மாநிலங்களவை செயலாளரிடம் கொடுத்துள்ள அறிவிப்பு கடிதத்தில் அதிமுக உறுப்பினர்கள் கையெழுத்துப் போடாமல் நழுவிக் கொண்டது ஏன்? இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அஇஅதிமுக விளக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago