வாழும்போதே கலைஞர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் - மியூசிக் அகாடமி 98-வது இசை விழாவில் ஒடிசா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மியூசிக் அகாட​மி​யின் 98-வது இசை விழா நேற்று தொடங்​கியது. தொடக்க விழா​வில் ஒடிசா உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி எஸ்.​முரளிதர் சிறப்பு விருந்​தினராக கலந்​து​கொண்டு, குத்து​விளக்​கேற்றி விழாவை தொடங்கி​வைத்​தார்.

மியூசிக் அகாட​மி​யின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டிருக்​கும் டி.எம்​.கிருஷ்ணாவுக்கு, ‘தி இந்து’ குழுமம் வழங்​கும் 1 லட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய சங்கீத கலாநிதி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி விருதை அளித்து சிறப்புரை ஆற்றினார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: கலைஞர்​கள், அவர்கள் வாழும் காலத்​திலேயே கொண்​டாடப்பட வேண்​டும், கவுரவிக்​கப்பட வேண்​டும். மாபெரும் நகைச்​சுவை மன்னனாக இன்று கொண்​டாடப்​படும் சார்லி சாப்​ளின், வாழும் காலத்​தில் கொண்​டாடப்​பட​வில்லை.

இங்கும் வீணை தனம்​மாள், நாகசுர சக்கர​வர்த்தி டி.என்​.ராஜரத்​னம், புல்​லாங்​குழல் மாலி, எம்.டி.ராம​நாதன், வீணை எஸ்.பாலசந்​தர், லால்​குடி ஜெயராமன் உள்ளிட்​ட​வர்கள் அவர்கள் வாழும் காலத்​தில் கவுரவிக்​கப்​பட​வில்லை. அந்த பட்டியலில் டி.எம்​. கிருஷ்ணாவை​யும் சேர்க்​காமல், சங்கீத கலாநிதி விருதுக்கு அவரை தேர்ந்​தெடுத்​ததற்கு மியூசிக் அகாட​மிக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

டி.எம்​.கிருஷ்ணா தனது ஏற்புரை​யில், “தி இந்து குழுமம் வழங்கி​யிருக்​கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி விருது’, அங்கீகாரம் தரக்கூடிய ஒரு விருது என்பதை தாண்டி எனக்கு கிடைத்​திருக்​கும் அவரது ஆசியாக கருதுகிறேன். இந்த விருது எனது பொறுப்பு​ணர்வை இன்னும் அதிகரிக்​கும்” என்றார். மியூசிக் அகாட​மி​யின் ஆண்டு மலரை நீதிபதி எஸ்.​முரளிதர் வெளி​யிட, டி.எம்​.கிருஷ்ணா பெற்றுக்​கொண்​டார்.

முன்னதாக வரவேற்​புரை ஆற்றிய மியூசிக் அகாடமி தலைவர் என்.​முரளி பேசி​ய​தாவது:மக்களுக்கு பலன் அளிக்​கும் பல தீர்ப்புகளை வழங்​கியவர் நீதிபதி எஸ்.​முரளிதர். இந்த ஆண்டுக்கான மியூசிக் அகாட​மி​யின் சங்கீத கலாநிதி விருதை 2025 ஜனவரி 1-ம் தேதி டி.எம்​. கிருஷ்ணா பெறு​வார்.

80 இசை நிகழ்ச்​சிகள்: சங்கீத கலா ஆச்சார்யா விருதை பிரபல மிருதங்க வித்​வான் பாறசாலா ரவி, விதூஷி கீதாராஜா பெறு​வார்​கள். டிடிகே விருதை, திரு​வை​யாறு சகோதரர்​களான பாகவதர்கள் எஸ்.நரசிம்​மன், எஸ்.வெங்​கடேசன், வயலின் வித்​வான் ஹெச்​.கே.நரசிம்​மமூர்த்தி பெறுகின்​றனர். இசை அறிஞர் விருதை டாக்டர் மார்​கரெட் பாஸ்​டின் பெறுகிறார்.

இந்த ஆண்டு மார்கழி இசை விழா​வில் 80 இசை நிகழ்ச்​சிகள் நடைபெற உள்ளன. மோகினி ஆட்டக் கலைஞர் டாக்டர் நீனா பிரசாத் இந்த ஆண்டுக்கான நிருத்ய கலாநிதி விருதை ஜனவரி 3-ல் தொடங்​கும் மியூசிக் அகாட​மி​யின் 18-வது நாட்டிய விழா​வில் பெற உள்ளார். நாட்டிய விழா ஜனவரி 9 வரை நடை​பெறும். இவ்​வாறு அவர் பேசினார். மியூசிக் அ​காடமி செய​லா​ளர் மீனாட்சி, நிகழ்ச்​சியை தொகுத்து வழங்​கினார். செய​லா​ளர் ​வி.ஸ்ரீகாந்த் நன்​றி​யுரை வழங்​கினார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்